சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை அவுட் செய்ய காரணமாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை டிவிட்டரில் ஊம குத்தாக குத்தி விட்டுள்ளார் ஹர்த்திக் பாண்ட்யா.

பாகிஸ்தானுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி பைனலில், 339 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சதம் அடித்த ஜமான், ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, பும்ராவின் நோபாலில் அவுட்டானதால் தப்பினார். இதன்பிறகு இந்திய பேட்டிங்கின்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியபோதும், ஹர்திக் பாண்டாயா மட்டும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

அதிரடி, சரவெடி

அதிரடி, சரவெடி

43 பந்துகளில் 6 சிக்சர்கள் உதவியோடு 76 ரன்கள் குவித்து பாண்ட்யா அசத்தியிருந்த நேரத்தில் ஜடேஜா மோசமாக பாண்ட்யா ரன் அவுட்டுக்கு காரணமாகிவிட்டார்.

அநியாயம்

அநியாயம்

ஓடுவது போல முன்வந்துவிட்டு பிறகு திரும்பி ஓடினார் ஜடேஜா. எனவே, பாண்ட்யா அவுட்டாக வேண்டியதாயிற்று. இதுகுறித்து கருத்து தெரிவித்த விவிஎஸ் லட்சுமணன், தான் ஜடேஜா இடத்தில் இருந்திருந்தால் பாண்ட்யாவுக்காக விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன் என கூறினார்.

பாண்ட்யா கடுப்பு

பாண்ட்யா கடுப்பு

பிரபலங்கள் பலரும் ஜடேஜா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பாண்ட்யாவும் கடுப்பாகியுள்ளார். நேற்று அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறும்போது அவர் தனது கோபத்தை முகத்தில் காட்டியிருந்தார்.

டிவிட்டரில் திட்டு

டிவிட்டரில் திட்டு

இந்தநிலையில் டிவிட்டரில் பாண்ட்யா, ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்து ஒரு டிவிட் போட்டிருந்தார். ஆனால், இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை போல இந்த டிவிட் காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தநிலையில் அதை டெலிட் செய்துள்ளார் பாண்ட்யா.

கொள்ளைக்காரன்

கொள்ளைக்காரன்

தனது டிவிட்டில், நம்மில் ஒருவராலேயே நாம் கொள்ளையடிக்கப்பட்டோம். பிறகு அடுத்தவர்களை குறை சொல்லி என்ன பயன் என்று பொருள்படும் வகையில் ஹிந்தியில் கூறியிருந்தார். அதைத்தான் இப்போது டெலிட் செய்துவிட்டார். ஆனால் டிவிட்டின் ஸ்கிரீன் ஷாட்டுகள் நெட்டில் வட்டமிடுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pakistan humiliated India by a huge margin of 180 runs to lift their maiden ICC Champions Trophy on Sunday (June 18).
Please Wait while comments are loading...