For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாசினி கொலை.. பெற்ற தாய் கொலை.. போலீசுக்கு போக்கு.. இந்த தஷ்வந்த் யார்?

சென்னையில் ஹாசினி என்ற சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த தஷ்வந்த் தற்போது போலீசிடம் இருந்து தப்பித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கொலையாளி தஷ்வந்தை மும்பை முழுவதும் தேடும் தமிழக போலீஸ்..வீடியோ

    சென்னை: ஒரு கொலையாளி மொத்த தமிழ்நாடு போலீசுக்கும் மீண்டும் மீண்டும் போக்கு காட்டிக் கொண்டு இருக்கிறான். ஒன்றும் அறியாத சிறுமி ஹாசினியை கொலை செய்ததில் இருந்து பெற்ற தாய் சரளா கொலை என வரிசையாக தொடர் குற்றங்களை செய்து வருகிறான்.

    கொலை செய்தது மட்டும் இல்லாமல் போலீசிடம் இருந்து இரண்டு முறை மிகவும் சாமர்த்தியமாக தப்பித்து சென்று இருக்கிறான். சினிமாவில் காட்டப்படும் வில்லன்களுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இவரது செயல்கள் ஒவ்வொன்றும் இருக்கின்றது.

    இந்த நிலையில் இவரது இந்த மோசமான மனநிலைக்கும் அவனது தொடர் குற்றங்களுக்கும் நிறைய காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

    தஷ்வந்த்தின் முதல் குற்றம்

    தஷ்வந்த்தின் முதல் குற்றம்

    சென்னை மாங்காட்டில் 7 வயது கூட முழுமையாக நிரம்பாத சிறுமி ஹாசினி, தஷ்வந்த் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தாள். வெளியில் விளையாடிக் கொண்டு இருந்த அந்த சிறுமியை தன் வீட்டிற்கு பேசி அழைத்து சென்று இருக்கிறான் தஷ்வந்த். அவனின் முதல் குற்றம் இங்கிருந்துதான் துவங்கியது. வீட்டிற்கு வந்த அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தி இருக்கிறான். மேலும் கொடுமை மட்டும் இல்லாமல் உடல் முழுக்க காயங்களை ஏற்படுத்தியுள்ளான்.

    கொலை

    கொலை

    இந்த நிலையில் அந்த குழந்தை இரண்டு முறை காப்பாற்றும்படி கத்தியிருக்கிறது. இதனால் எங்கே மாட்டிவிடுவோமோ என்று பயந்து கொண்டு அந்த குழந்தையை அங்கேயே கொலை செய்து இருக்கிறான். கொலை செய்தது மட்டும் இல்லாமல் அந்த சிறுமியின் உடலை பையில் எடுத்து சென்று எரித்து சாம்பலாக்கி இருக்கிறான். இது சிசிடிவியில் பதிவாகி அதன்முலமே போலீஸ் இவனை பிடித்தது.

    போலீசின் தவறு

    போலீசின் தவறு

    இந்த வழக்கு விசாரணையில் தஷ்வந்த் போலீசிடம் தன் செய்த கொலையை முதலில் ஒப்புக் கொள்ள மறுத்து இருக்கிறான். முதலில் கல்யாணத்திற்கு சென்றேன், அதற்கு வாங்கிய பரிசு பொருள்தான் பையில் இருந்தது, ஹாசினி யார் என்று தெரியாது என்றெல்லாம் கதை சொல்லி இருக்கிறான். ஆனால் போலீஸ் இவனது பேச்சை நம்பாமல் தொடர்ந்து விசாரித்ததில் மொத்த உண்மையையும் சொல்லி இருக்கிறான். ஆனால் போலீஸ் அதன்பின் அவனுக்கு எதிராக சரியான சாட்சியங்களை திரட்டாமல் போய் இருக்கிறது.

    தஷ்வந்துக்கு ஜாமீன்

    தஷ்வந்துக்கு ஜாமீன்

    போலீஸ் சரியாக ஆதாரம் திரட்டாததால் வழக்கில் நிறைய பின்னடைவு ஏற்பட்டது. தஷ்வந்துக்கு எதிராக ஜாமினில் வெளிவராத படி குண்டர் சட்டம்தான் முதலில் போடப்பட்டு இருந்தது. ஆனால் சரியான சாட்சியம் இல்லை என்பதால் இந்த குண்டர் ரத்து செய்யப்பட்டது. இதை வைத்து தஷ்வந்த் தந்தை சேகர் வழக்கு தொடர்ந்தார். அவர் வழக்கின் அடிப்படையில் தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    சேகரின் தவறு

    சேகரின் தவறு

    தன் மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்த சேகர் மிகப்பெரிய தவறு செய்தது இங்கேதான். ஹாசினி கொல்லப்பட்ட்ட போது ஹாசினியின் தந்தை பாபு செய்தியாளர் சந்திப்பில் ஒரு விஷயம் கூறினார். அப்போது ''தஷ்வந்த் தந்தை என்னிடம் சவால் விடுகிறார். எப்படி என் மகனை வெளியே கொண்டு வருகிறேன் பார் என்று கூறினார். தஷ்வந்த் வெளியே வந்தால் இன்னும் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படும்'' என்று அழுது கொண்டே பேசினார். பாபு கூறியது போலவேதான் அதற்கு அடுத்தடுத்த நிகழ்வுகளும் நடந்தது.

    அடிமை

    அடிமை

    இந்த நிலையில் ஜாமினில் வந்த பின்புதான் தஷ்வந்த் மிகவும் மோசமாக மாறி இருக்கிறான். ஒருமுறை ஜெயிலுக்கு சென்றால் எப்போதும் திருந்த முடியாது என்று கூறுவார்கள். அதேபோல் ஜெயிலில் இருந்து மிகவும் மோசமாக மாறி வீட்டிற்கு வந்துள்ளான். தினமும் அப்பா, அம்மாவிற்கு முன்பாகவே போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறான். எந்நேரமும் போதையில் இருந்ததாக அவன் தந்தை தற்போது போலீசில் கூறியுள்ளார்.

    சொன்ன படியே நடந்தது

    சொன்ன படியே நடந்தது

    தஷ்வந்த் தன்னுடைய இரண்டாவது தவறை இங்குதான் செய்தான். வீட்டில் இருந்த பெற்ற தாய் சரளாவிடம் பணம் கேட்டு சண்டையிட்டு இருக்கிறான். பணம் இல்லை என்றதும் அதே இடத்தில் அம்மாவை அடித்து கொலை செய்து உள்ளான். கொலையை செய்துவிட்டு அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி இருக்கிறான். ஹாசினி அப்பா சொன்னது போலவே நடந்தது.

    மும்பையில் கைது

    மும்பையில் கைது

    போலீஸ் மிகவும் திறமையாக செயல்பட்டது இந்த இடத்தில் தான். மும்பையில் அவன் இருக்கும் தகவல் வந்து அங்கு தனிப்படை தேடிச்சென்றது. மாறுவேடத்தில் அவனை பின் தொடர்ந்த போலீஸ் அவனை மடக்கி பிடித்தது. இந்த முறை மிகவும் பாதுகாப்பாக மும்மை நீதிமன்றத்தில் அவனை ஒப்படைத்தது. அதே சமயத்தில் அவன் மீது சரளாவை கொலை செய்தது, ஜாமினில் தப்பி ஓடியது என இன்னும் சில வழக்குகள் பதியப்பட்டது.

    போலீசின் அடுத்த தவறு

    போலீசின் அடுத்த தவறு

    எப்படி முதலில் அவனை கைது செய்துவிட்டு ஆதாரம் தேடுவதில் போலீஸ் மெத்தனம் காட்டியதோ, அதே போல் இந்த முறையும் போலீஸ் மெத்தனம் ஆகியது. அவ்வளவு பெரிய குற்றவாளியை தனியாக கழிப்பறைக்கு அனுப்பி வைத்து இருக்கிறது. பல பாதுகாப்பு இருக்கும் மும்பை விமான நிலையத்தில் இருந்து யாரின் கண்களிலும் படாமல் அசால்ட்டாக அந்த கொலைகாரன் எஸ்கேப் ஆகி இருக்கிறான். அவன் கைகளில் விலங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தஷ்வந்துக்கு என்ன பிரச்சனை

    தஷ்வந்துக்கு என்ன பிரச்சனை

    இந்த நிலையில் தஷ்வந்துக்கு என்ன பிரச்சனை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். அவன் சிறுவயதில் மிகவும் சொகுசாக வளர்ந்து இருக்கின்றான். மேலும் மிகவும் திமிராகவும் இருந்துள்ளான். அவன் தந்தை சேகரின் குணம் இவனை அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும் எப்போது புதிராகவே இருந்துள்ளான். அவனுக்கு பெரிய மனநல பிரச்சனை இருப்பதாகவும், ஒரு சீரியல் கில்லருக்கு உரிய சுபாவம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    English summary
    Dhaswant, who was charged with raping and murdering a seven-year-old girl in Mugalivakkam last February, murdered his mother Sarala at their house near Kundrathur.Daswant was arrested in Mumbai in his mother's murder case will be brought from Mumbai to Chennai tonight. Mumbai court orders police to make appear Daswant to Sriperumbudhur court before December 9. He again escaped from police in Mumbai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X