தஷ்வந்தை என்கவுண்டர்ல போடுங்க... கொதிக்கும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
உல்லாச வாழ்க்கைக்காக தாயை கொன்ற தஷ்வந்த் - மும்பையில் சிக்கியது எப்படி?- வீடியோ

சென்னை: காமுகன் கொலையாளி தஷ்வந்தை சுட்டுத்தள்ளுங்க அதுதான் சரியான தண்டனை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். மும்பையில் உல்லாசமாக இருந்த அவனை குன்றத்தூர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த ஹாசினி என்ற ஏழு வயது சிறுமி தஷ்வந்த் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் எடுத்த தந்தை

ஜாமீனில் எடுத்த தந்தை

தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. ஆனால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

தஷ்வந்த கொலையாளி

தஷ்வந்த கொலையாளி

இதனையடுத்து குன்றத்தூருக்கு தஷ்வந்த் பெற்றோர் இடம் பெயர்ந்து வந்தனர். தாயை அவ்வப்போது கொலை செய்துவிடுவதாக தஷ்வந்த மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

டிசம்பர் 2ஆம் தேதியன்று தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த்தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தஷ்வந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மும்பையில் கைதான தஷ்வந்த்

மும்பையில் கைதான தஷ்வந்த்

தலைமறைவான தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டான். மும்பையில் உல்லாசமாக இருந்த தஷ்வந்தை மடக்கியுள்ளனர் போலீசார்.சென்னைக்கு அழைத்து வந்து வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொல்லுங்க சார் கொல்லுங்க

தஷ்வந்த் மீது பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது - செய்தி அந்த நாயை அங்கேயே சுட்டுத் தள்ளுங்க.. பயண செலவு, வழக்கு செலவு எல்லாம் மிச்சமாகும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

வழக்கு செலவு மிச்சமாகட்டும்

சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது எதுக்கு சுத்திவளைச்சு பிடிச்சுக்கிட்டு, என்கவுண்டர் போட்டுத் தள்ள வேண்டியதுதானே என்று கேட்கிறார் ஒருவலைஞர்.

ஜாமீன் கொடுக்க வேண்டாம்

அடுத்த ஜாமீனும் அடுத்த கொலையும் வராதிருக்க வேண்டுவோம் என்று வேண்டுகிறார் ஒருவர்.

தந்தை ஜாமீன் தருவாரா?

சிறுமி ஹாசினியகயும், தன் தாயையும் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது. இப்பவும் அவனோட அப்பன் ஜாமீன் மனு கொடுப்பானா? என்று கேட்கிறார் ஒரு நெட்டிசன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kill him encounter nettisons post twitter Dhashvanth accused murder of seven-year-old girl child Hasini, was arrested in Mumbai.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற