For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்.. பிரபல பாடல்களை ஒலிபரப்ப முக்கிய ஹோட்டல்களுக்கு தடை!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின்போது, ஒரு தனியார் நிறுவனம் உரிமம் பெற்றுள்ள இந்தி மற்றும் பிற மொழிப் பாடல்களை ஒலிபரப்ப சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த நோவெக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் பிரபலமான இந்திப் பாடல்கள் மற்றும் சில மாநில மொழிப் பாடல்களின் உரிமம் பெற்றுள்ளது. குறிப்பாக ஜீ, யாஷ்ராஜ் பிலிம்ஸ், ஷிமேரோ போன்ற நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்துள்ள பாடல் உரிமம் இந்த நிறுவனத்திடம்தான் உள்ளது. இந்தப் பாடல்களை உரிமம் பெறாமல் சில நட்சத்திர ஹோட்டல்களில் பயன்படுத்தப்படுவதாக அந்த நிறுவனம் புகார் அளித்துள்ளது.

HC bans star hotels to perform Bollywood hit songs

இதுதொடர்பாக நோவெக்ஸ் கம்யூனிகேஷனஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பிரபல ஹிந்தி பாடல்கள், சில மாநில மொழி பாடல்களின் உரிமத்தை பெற்றுள்ளோம். ஆகையால், பாடல்களை ஒலிபரப்ப எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக, முக்கிய ஓட்டல்களுக்கு பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் அனுமதி பெறவில்லை. எனவே, இந்த ஹோட்டல்களில் எங்கள் நிறுவனத்தின் பாடல்களை ஒலிபரப்ப தடைவிதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், வேளச்சேரியிலுள்ள வெஸ்ட் இன், தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி, வடபழனி கிரீன் பார்க், அடையாறு க்ரவுன் பிளாஸா ஆகிய ஹோட்டல்களில் புத்தாண்டுக்கு முந்தைய நாளிலிருந்து ஜனவரி 20 -ஆம் தேதி வரை, நோவெக்ஸ் நிறுவன பாடல்களை ஒலிபரப்புவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.

தாஜ் குழுமம், ஐடிசி மற்றும் லீலா குழும ஓட்டல்கள் நோவெக்ஸ் நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்றுள்ளன.

English summary
The Madras High Court has ordered 4 leading star hotels in Chennai not to perform some songs during the new year celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X