For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் முறைகேடு விசாரணை: சகாயம் குழுவுக்கு மேலும் 8 வாரம் ஹைகோர்ட் அவகாசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க சகாயம் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும், 8 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

HC grants eight more weeks to Sagayam to file report

இந்த வழக்கில், சகாயம் குழு அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக 8 கட்ட .ஆய்வுகளை நடத்தி இடைக்கால அறிக்கை தயார் செய்துள்ளனர் சகாயம் குழுவினர்.

மார்ச் 12ஆம் தேதியான இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். எனவே இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான சகாயம் தரப்பு வழக்கறிஞர், முறைகேடு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார்.

காவல்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளை சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி கேட்ட நிலையில், இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை எனவும் கூறினார். எனவே, விசாரணை அறிக்கை அளிக்க கால அவகாசம் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது, எதிர்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து அதிகாரங்களும் படைத்தவர் போல சகாயம் நடந்து கொள்வதாகத் கூறினார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இது போன்ற முறைகேடுகளாலும், லஞ்சம், ஊழல் போன்றவற்றாலும் இயற்கை வளம் அழிந்து விட்டதாகவும், அதிகாரிகளின் துணை இல்லாமல் இது போன்று நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் இயற்கை வளத்தை பாதிக்கும் குவாரிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், அதேபோன்று, தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டிவரும் என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய 8 வாரம் கால அவகாசம் அளித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

English summary
The Madars High Court today granted eight more weeks to IAS officer U Sagayam, the special Officer appointed by it to probe alleged granite mining irregularities in Madurai district, to file his report in court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X