For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக புகார் மீது என்ன நடவடிக்கை?.. சேலம் கலெக்டர், தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Google Oneindia Tamil News

HC issues notice to Salem collector and CEO
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து திமுக வேட்பாளர் பெ.மாறன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகரபூஷணம், தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மாறன் தொடர்ந்த வழக்கில், ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்துள்ளது. ஆனால் நடத்தை விதியை மீறும் விதமாக ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக சேலம் மாவட்ட கலெக்டரும் ஈடுபடுகிறார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்காடு தொகுதியில் உள்ள பசுமை வீடுகளில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்றக் கோரி சேலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். எனவே, சேலம் மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். சேலம் மாவட்ட கலெக்டராக செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பின்னர் நீதிபதி கூறுகையில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார். எனவே, இந்த வழக்கிற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பொதுவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று கூறி உத்தரவிட்டார்.

English summary
Madras HC has ordered to issue notice to Salem collector and CEO Praveen Kumar on DMK's petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X