For Daily Alerts
ஆக்கிரமிப்புகளால் சுவாசிக்க கூட இடமில்லை- ஹைகோர்ட் நீதிபதிகள் வேதனை
சென்னை: சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்வதை விடுத்து, ஒருமாதத்திற்குள் அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்கிரமிப்புகள் புற்றுநோய் போல பரவி வருவதால் சுவாசிக்க இடமில்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு மேற்கண்ட கருத்தை கூறியுள்ளது. விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவதை தவிர்த்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிபாதிகள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் விதிமீறல் கட்டிடங்களை ஒருமாதத்திற்குள் அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.