For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேகர் ரெட்டி வழக்கு: சிபிஐக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி.. அக்.25க்குள்அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சேகர் ரெட்டி மீதான வழக்கு தொடர்பாக வரும் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சேகர் ரெட்டி வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியமுடியவில்லையா? 5 பேருக்குப் பிறகு வேறு யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

வரும் 25ஆம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுக்கள்

செல்லாத ரூபாய் நோட்டுக்கள்

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து செல்லாத ரூ. 500, 1000 நோட்டுகளை தங்கமாகவும், புதிய ரூபாய் நோட்டுகளாகவும் தொழில் அதிபர்கள் மாற்றி வருவதாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

சிக்கிய சேகர் ரெட்டி

சிக்கிய சேகர் ரெட்டி

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த தொழில் அதிபரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோதனை நடத்தினர்.

தங்கம், பணம் பறிமுதல்

தங்கம், பணம் பறிமுதல்

சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடுகள், அபிபுல்லா சாலையில் உள்ள அலுவலகத்தில் 4 நாட்களாக சோதனை நடந்தது. சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து சுமார் 177 கிலோ தங்கம், 131 கோடி ரூபாய் பணம், 500 கோடி ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. இதில், 92 கோடி ரூபாய் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேகர் ரெட்டி கைது

சேகர் ரெட்டி கைது

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் சிலர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சேகர் ரெட்டி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

சிபிஐ பிடியில் சிக்கிய சேகர் ரெட்டி

சிபிஐ பிடியில் சிக்கிய சேகர் ரெட்டி

சுமார் ரூ.24 கோடி புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் சிக்கி இருந்ததால் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர், உறவினர் மீது அமலாக்கப் பிரிவினர் வழக்கு பதிந்துள்ளனர். இதற்கிடையே, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐயும் வழக்கு பதிவு செய்து

நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள் கேள்வி

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சேகர் ரெட்டி வழக்கில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று நீதிபதிகள் கேட்டனர்.

புதிய நோட்டுக்கள் எப்படி வந்தன?

புதிய நோட்டுக்கள் எப்படி வந்தன?

புதிய ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியமுடியவில்லையா? 5 பேருக்குப் பிறகு வேறு யாரெல்லாம் கைது செய்யப்பட்டனர் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.

நவம்பர் 6க்கு ஒத்திவைப்பு

நவம்பர் 6க்கு ஒத்திவைப்பு

சேகர் ரெட்டியின் வழக்கின் விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Madras High court has ordered CBI to submit report on 25th October in Money laundering case against Sekar Reddy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X