For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் ஈபிஎஸ், ஓபிஎஸ் கட்அவுட்: அரசு அறிக்கை தர ஹைகோர்ட் உத்தரவு

திருச்சி எம்ஜிஆர் விழாவில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள், பேனர்கள் பற்றி அறிக்கை தர தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி எம்ஜிஆர் விழாவில் வைக்கப்பட்ட பேனர்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் மாலை 4 மணிக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிருடன் உள்ளவர்களுக்கு பேனர்கள் மற்றும் கட்அவுட்டுகள் வைக்க தடை விதித்து கடந்த செவ்வாய் அன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனி நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட் டிவிசன் பெஞ்சில் சென்னை மாநகராட்சி சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

HC order TN government to give report to cutout in Trichy

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருலோச்சன சுந்தரி என்பவர் தமது வீட்டுக்கு அருகே அடிக்கடி பேனர், கட்சி விளம்பரம் வைப்பதால் தொல்லை ஏற்படுவதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 1959-ம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது திருத்த வேண்டும் என தெரிவித்து கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்காணித்து சுத்தமான சூழ்நிலைகள் நிலவ உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து யூனியன்களில் சுற்றுச்சூழலையும், தூய்மையையும் காப்போம் என்று தலைமைச் செயலாளர் உறுதியளிக்க வேண்டும். மேலும், பேனர்களை ஸ்பான்சர் செய்பவர்களின் புகைப்படமும் இடம்பெறக்கூடாது.

HC order TN government to give report to cutout in Trichy

இந்த உத்தரவை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பஞ்சாயத்து யூனியன்கள் ஆகியவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.மேலும் பேனரில் உயிருடன் இருப்பவர் புகைப்படம் இடம்பெறக்கூடாது என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

திருச்சியில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃப்ளெக்ஸ்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார்கள். இது மக்களுக்கு இடையூராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி எம்ஜிஆர் விழாவில் வைக்கப்பட்ட பேனர்கள் பற்றி மாலை 4 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட், பேனர்கள் வைக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளைதான் விசாரணைக்கு வர உள்ளது. எனவே இன்றைய தினம் திருச்சியில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Madras high court has ordered TamilNadu government will report 4 PM for Trichy cutout and flex banners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X