For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நண்பேன்டா படத்துக்கு வரி விலக்கு தராதது ஏன்?- தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு தராதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயண்ட் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் ‘நண்பேன்டா' என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் இன்று (வியாழக்கிழமை) வெளியானது. இந்த படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கேட்டு, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பம் செய்தார்.

ஆனால், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு மனுவில், ‘தமிழில் தலைப்பு வைத்துள்ள, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது.

நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கேட்டு கடந்த மார்ச் 20-ந்தேதி விண்ணப்பம் செய்தோம். இதையடுத்து எங்களது படத்தை பார்த்த நிபுணர் குழு, நண்பேன்டா படத்தில் ஆபாசம் , வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கில சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

ஆனால் இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற முறையில் யுனிவர்சல் சான்றிதழ் (யு) வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொள்ள அந்த நிபுணர் குழு தவறிவிட்டது. எனவே, எங்களது படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நிதிமன்றம் அட்வகேட் கமிஷனர் மூலம் படத்தை பார்த்து முடிவு செய்யவேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி, ‘நண்பேன்டா படத்தை இந்த நீதிமன்றமோ அல்லது இந்த நீதிமன்றம் அமைக்கும் வக்கீல் கமிஷனரோ பார்த்து விட்டு, இந்த படம் கேளிக்கை வரி விலக்கு பெற தகுதியுள்ளதா? என்பதை முடிவு செய்யலாம்.

தமிழக அரசு உள் நோக்கத்துடன் மனுதாரரின் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுக்கிறது. இந்த படத்தில் ஆபாசம், வன்முறை நிறைந்து இருப்பதாக கூறுவது ஏற்க கூடியது அல்ல. படத்தில் ஆங்கில சொற்கள் அதிகளவில் இருப்பதாக கூறுவதையும் ஏற்க கூடியது அல்ல.

த்ரீ (3) என்ற படத்தில் ஆங்கிலம் வார்த்தைகள் கொண்ட பாடல் உள்ளது. மான் கராத்தே படத்திலும் ஓபன் தி டாஸ்மாக் என்ற ஆங்கில கலப்பு கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அந்த படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்போது, எங்களது படத்துக்கு அந்த சலுகை வழங்காதது உள் நோக்கம் கொண்டது' என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு நோட்டீசு அனுப்பிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், 'நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என்று உத்தரவிட்டார்.

விசாரணையை வரும் 7-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

English summary
The Madras High Court has ordered to send notice to Tamil Nadu govt for not giving tax exemption to Nanbenda movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X