For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாண்டிபஜார் நடைபாதை ஷாப்பிங்வாசிகளே... டேக் டைவர்சன் டூ லட்சுமி காந்தா தெரு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள நடைபாதைக் கடைகளை 6 நாட்களில் இடமாற்றம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.

சென்னைவாசிகளுக்கும் சரி, வெளியூரிலிருந்து சென்னை வருபாவ்ர்களுக்கும் சரி தி.நகர் மற்றும் பாண்டி பஜாரில் ஷாப்பிங் செய்வதென்றால் அலாதி பிரியம் தான். அதிலும் குறிப்பாக பாண்டி பஜார் நடைபாதைக் கடைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.

கடைகளில் பேச முடியாத பேரம் பேசும் உரிமை இத்தகைய கடைகளில் சாத்தியமாவதே இதற்கு முக்கியக் காரணம். ஆனால், இத்தகைய கடைகளால் போக்குவரத்து பாதிக்கப் படுவதாகத் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தற்போது அத்தகைய கடைகளை அடுத்த 6 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பாண்டிபஜார் கடைகள்...

பாண்டிபஜார் கடைகள்...

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பாண்டி பஜார்-உஸ்மான் சாலையில் ரெடிமேட் ஆடைகள், செருப்புகள், அலங்கார பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பூ-மாலைகள், பழங்கள் உள்பட வீட்டு உபயோகத்துக்கான பல்வேறுவிதமான பொருட்கள் விற்பனை செய்யும் சுமார் 500-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன.

பொது நல வழக்கு...

பொது நல வழக்கு...

கடந்த 2001ம் ஆண்டு இத்தகைய நடைபாதை கடைகளினால் தியாகராயநகர் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்களும், வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றும் ‘டிராபிக்' ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

பாதிக்கப் படும் வியாபாரம்...

பாதிக்கப் படும் வியாபாரம்...

அதனைத் தொடர்ந்து, பெரிய வர்த்தக நிறுவனங்களும் தங்கள் கடைகளை மறைத்து நடைபாதை வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி வழக்கு தொடர்ந்தனர்.

தனி வணிக வளாகம்...

தனி வணிக வளாகம்...

ஒய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. அந்த கமிட்டி நடைபாதை வியாபாரிகளுடன் நடத்திய ஆலோசனையில், நடைபாதை வியாபாரிகள் தங்களுக்கு தனியாக வணிக வளாகம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து பாண்டிபஜாரில் வணிக வளாகம் கட்டிக்கொடுக்க அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் கமிட்டி பரிந்துரை செய்யப்பட்டது.

3 அடுக்கு வணிக வளாகம்...

3 அடுக்கு வணிக வளாகம்...

அதன்படி, முந்தைய தி.மு.க. ஆட்சியில், மாநகராட்சி மூலதன நிதியில் இருந்து ரூ.4 கோடி 30 லட்சம் செலவில் பாண்டி பஜார் லட்சுமி காந்தா தெரு அருகில் கீழ்தளத்துடன் கூடிய 3 அடுக்கு வணிக வளாகம் 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

அதே இடத்தில்...

அதே இடத்தில்...

வணிக வளாகம் கட்டி முடிக்கப் பட்டு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகியும் பாண்டிபஜார் நடைபாதை வியாபாரிகள் தங்கள் கடைகளை பழைய இடத்திலேயே நடத்தி வருகின்றனர்.

6 நாட்களுக்குள்...

6 நாட்களுக்குள்...

இந்த நிலையில் வரும் 20-ந்தேதிக்குள் பாண்டிபஜார்-உஸ்மான் சாலை வியாபாரிகள் இடங்களை காலி செய்துவிட்டு, சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இடமாற்ற வேலை...

இடமாற்ற வேலை...

நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தற்போது நடைபாதை வியாபாரிகள், புதிய வணிக வளாகத்திற்கு தங்கள் கடைகளை மாற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 600 கடைகள்....

கிட்டத்தட்ட 600 கடைகள்....

இது குறித்து சென்னை மாநகர சில்லரை-நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கருணாநிதி தெரிவித்ததாவது, ‘உஸ்மான் சாலையில் 210 நடைபாதை கடைகளும், பாண்டிபஜார் பகுதியில் 398 நடைபாதை கடைகளும் இயங்கி வருகின்றன.

பண்டிகை கால வியாபாரம்...

பண்டிகை கால வியாபாரம்...

புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் 628 கடைகள் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால், வியாபாரம் மும்முரமாக இருக்கும். எனவே நடைபாதை கடைகளை காலி செய்வதற்கு ஜனவரி மாதம் இறுதி வரை காலக்கெடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தோம்.

காலக்கெடு முடிந்தது....

காலக்கெடு முடிந்தது....

பலமுறை காலக்கெடு நீடிக்கப்பட்டு விட்டதால், இனியும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது. அக்டோபர் 20-ந்தேதிக்குள் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே நீதிமன்றத்தின் தீர்ப்புபடி, நடைபாதை கடைகளை வணிக வளாகத்துக்கு கொண்டு செல்வோம்,' எனக் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு...

குற்றச்சாட்டு...

லிப்ட், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ள போதும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தப்பிக்க வழி இல்லாத சூழலில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளதாகவும், கடைகளின் அளவுகள் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
The Madras High Court has directed the Chennai Corporation to shift the platform shops in Pondy Bazaar with in 6 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X