For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை காமன்வெல்த் மாநாடு… உண்ணாவிரதத்திற்கு ஹைகோர்ட் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

HC permits fast protest against Commonwealth meet
சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த தியாகுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கடற்கரை சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த தியாகுவிற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்தது.

இதனையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடையாது என்ற அரசின் நிலையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாகவும், அதே சமயம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இன்று மாலைக்குள் தியாகுவிற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதே சமயம் உண்ணாவிரதம் இருக்கும் நாள், எத்தனை மணி நேரம் மற்றும் எவ்வளவு பிரமுகர்கள் வருவார்கள் என்பது உள்ளிட்ட வரங்களை தியாகு, நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

English summary
Madras HC has permitted Thiyagu for staging a fast protest against Sri Lanka Commonwealth meet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X