For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா புஷ்பா கணவர் மீது கொலை மிரட்டல் வழக்கு.. முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அண்ணா நகரில் லிங்கேஸ்வரன் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு லிங்கேஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 8க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா அதிமுகவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தவர். தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அருகேயுள்ள அடையல் என்ற சிறிய கிராமம்தான் சசிகலா புஷ்பாவின் சொந்த ஊர். அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன். இந்த தம்பதிக்கு பிரதீப் ராஜா, 17 என்ற ஒரே ஒரு மகன் உள்ளார்.

HC postponed Sasikala pushpa's husband Anticipatary bail plea

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் ஆபாசமாக திட்டியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒருவர் அண்ணா நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதிமுகவில் பிரபலமானவராகவும், ராஜ்யசபா எம்.பியாகவும் சசிகலா புஷ்பா இருந்த காரணத்தால் அந்த மனு தற்போது கிடப்பில் போடப்பட்டது. இந்த மனு தற்போது தூசி தட்டப்பட்டுள்ளது.

  • சென்னையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய சசிகலா புஷ்பா, பின்னர் டீம் ஐஏஎஸ் அகாடமி' என்ற பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தினார். அதிமுகவில் தீவிர தொண்டராக இருந்த சசிகலா புஷ்பா, திருநெல்வேலி மாவட்ட அதிமுக மகளிரணி இணைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.
  • அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகமானார். அன்றுமுதல் ஜெயலலிதாவின் நன் மதிப்பை பெற்றவராக மாறினார் சசிகலா புஷ்பா. சசிகலா புஷ்பா எந்த அளவுக்கு கட்சியில் வேகமாக வளர்ந்தோரோ, அதே அளவுக்கு தொடக்கம் முதல் சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது பெரும் சர்ச்சை எழுந்தது. பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் முழுநேர முனைவர் பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களுக்குதான் முனைவர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம்.
  • சசிகலா புஷ்பா 2012 அக்டோபர் 8ம் தேதி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத் துறையில் 3 ஆண்டுகள் முழுநேர முனைவர் பட்டப் படிப்புக்கு சேர்ந்தார். இப்படிப்பை முடித்து பட்டம் பெற குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாகிவிடும்.
  • சசிகலா புஷ்பா 3 ஆண்டுகள், 11 நாட்களில் (2015 அக்டோபர் 19ம் தேதி) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக பல்கலைக்கழகத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதியே அவரிடம் வாய்மொழித் தேர்வும் நடத்திவிட்டனர்.
  • முதுகலை படிப்பின்போது 53 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருந்த அவர், முனைவர் பட்டப்படிப்பில் 200க்கு 193 மதிப்பெண்கள் பெற்றதாக பல்கலைக் கழகம் தெரிவித்தது. தூத்துக்குடி மேயராகவும், அதிமுக மகளிரணி மாநிலச் செயலாளராகவும், ராஜ்யசபா உறுப்பி னராகவும் இருந்துகொண்டு, எப்படி ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவியாக சசிகலா புஷ்பா பயின்றிருக்க முடியும். அதுவும் 3 ஆண்டுகளில் ஆராய்ச்சியை முடித்து, முனைவர் பட்டம் பெற்றது சர்ச்சைகளை உருவாக்கியது.
  • இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் கடந்த 30ம் தேதி திமுக ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கினார். ஜெயலலிதாவைப் பற்றி ராஜ்யசபாவில் பேசி அகில இந்திய அளவில் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, தன் கணவரின் ட்ராக் ரெகார்டுகள் தோண்டி எடுக்கப் படுவதாக பேட்டி அளித்தார்
  • இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் திலகம் மற்றும் அவரது மகன் பிரதீப்ராஜா ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.அதில், 'எங்கள் மீது அண்ணாநகர் போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனால், எந்த நேரத்திலும் எங்களை போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுகிறோம்.
  • எங்கள் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து, விசாரணையை வரும் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
  • சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் ஆபாசமாக திட்டியதாகவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒருவர் அண்ணா நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில்தான் இருவரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary
Madras high court has postponed Sasikala pushpa's husband Anticipatary bail plea on Auguest 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X