For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம்: 6 பேர் கொலை வழக்கிலிருந்து பாரப்பட்டி சுரேஷ் விடுதலை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: லம் 6 பேர் கொலை வழக்கில் இருந்து வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி செளடாம்பிகா நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் (78). இவரது மனைவி சந்திராம்மாள் (72). இவர்களது மகன் ரத்தினம் (45),மருமகள் சந்தானகுமாரி (40), பேரன் கெüதமன் (20), பேத்தி விக்னேஸ்வரி (வயது-13) ஆகிய 6 பேரும் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், கொல்லப்பட்ட குப்புராஜின் மகன் சிவகுரு, இவரது மனைவி மாலா, மகள் யுவப்பிரியா, மகன் கோகுல், மருமகன் ரஜினி, திமுக பிரமுகர் பாரப்பட்டி சுரேஷ்குமார்,வழக்குரைஞர் சம்பத், செந்தில்குமார், சேகர் ஆகிய 9 பேரைக் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார், சம்பவம் நடைபெற்ற காலத்தில் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், ஆறு பேர் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், எனவே தன்னை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் பாரப்பட்டி சுரேஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை முடிவடைந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்புவழங்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி, பாரப்பட்டி சுரேஷ்குமாரை ஆறு பேர் கொலை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

English summary
Madras High Court released in former DMK minister Veerapandi S. Arumugam's nephew and former vice-chairman of Salem District Panchayat K. Sureshkumar alias ‘Parapatti' K. Sureshkumar in connection with six murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X