For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக கூறும் ஸ்கேன் மையங்கள்.. திருவண்ணாமலையில் ரெய்டு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று 3 ஸ்கேன் மையங்களில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக கூறும் ஸ்கேன் மையங்கள்- வீடியோ

    திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று ஸ்கேன் மையங்களில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சில ஸ்கேன் மையத்தில் கரு கலைப்பு செய்யப்படுவதாகவும், குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து சொல்வதாகவும் புகார்கள் வந்தது. இதனால் மத்திய சுகாதாரத்துறை சார்பு செயலாளர் அஜய் குமார் தலைமையில் அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

    Health department officials raid at 3 scan centers in Thiruvannamalai

    அங்கு உள்ள பல்வேறு ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூன்று ஸ்கேன் மையம் மற்றும் புவனேஸ்வரி என்ற மருத்துவமனையை சீல் வைத்தனர். செல்வாம்பாள் என்ற மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆய்வு தொடங்கி இருக்கிறது. தற்போது அங்கு இருக்கும் மூன்று ஸ்கேன் மையங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    டெல்லியிலிருந்து வந்த மத்திய குழு இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக கருகலைப்பு நடந்தேறி வருகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறது.

    English summary
    Abortion rate increases everyday in Thiruvannamalai. Police arrested one woman who murder a lady in the name of aborting. Now Health department officials raid at 3 scan centers in Thiruvannamalai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X