உயர்நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்... நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்த 18 அதிமுக எம்.எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து கடந்த திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட, அறிவுறுத்த வேண்டும் என்று திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

-18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு- உயர்நீதிமன்றம்

-18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்க கூடாது- உயர்நீதிமன்றம்

-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்: உயர்நீதிமன்றம்

-தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவை செயலாளர், முதல்வர், அரசு கொறடா பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு

-நம்பிக்கை வாக்கெடுப்பு, தகுதி நீக்கம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்.4-க்கு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம்

-18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் ஹைகோர்ட் மறுப்பு

-தகுதி நீக்க வழக்கில் பேரவை செயலாளர், முதல்வர், அரசு கொறடா பதிலளிக்க உத்தரவு

-வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-க்கு ஒத்திவைப்பு

-18 தொகுதிகள் காலியாக உள்ளது என்பதை ஏற்க முடியாது: நீதிபதி துரைசாமி

-வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

-மறு உத்தரவு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்க தடை- ஹைகோர்ட்

-நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

-மறு உத்தரவு வரும் வரையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

-நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்கிற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு: நீதிபதி துரைசாமி

-18 பேர் நீக்கத்தால் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தலாம்- தவே

-தேர்தல் நடத்துவதில் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும்- தவே

-தேர்தல் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த வேண்டும்: தவே

-இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்- சபாநாயகர் அரிமா சுந்தரம்

தகுதி நீக்க நோட்டீஸ் நேரிடையாக வழங்கவில்லை: தவே

-திமுக வழக்குக்கும் தினகரன் தரப்பு வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என கூற முடியாது: கபில் சிபல் குறுக்கீடு

-பதிலளிக்க 10 நாள் அவகாசம் தேவைப்படுவதாக சபாநாயகர் தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம் வாதம்

-18 எம்.எல்.ஏக்கள் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது: அரிமா சுந்தரம்

-18 எம்.எல்.ஏக்கள் நீக்கத்துக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு வெளியாக வாய்ப்பு என தகவல்

-அரசு, சபாநாயகர் மீது குற்றம்சாட்டுவதால் விளக்கம் தர கூடுதல் அவகாசம் தேவை- அரிமா சுந்தரம்

-எடப்பாடி அரசைக் காப்பாற்றுவதுதான் சபாநாயகரின் நோக்கம்: தவே

-எதியூரப்பா வழக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது: சபாநாயகர் வக்கீல் அரிமா சுந்தரம்

-அடிப்படை உறுப்பினராக நீடிக்கும்போது கொறடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும்? தவே

-18 பேரை நீக்கிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது: தவே வாதம்

-வழக்குகளுக்கு தேவையற்ற வாதத்தை முன்வைக்கிறது தினகரன் தரப்பு: அரிமா சுந்தரம்

-எம்.எல்.ஏக்களை நீக்கும் முன்பு ஆரம்பகட்ட விசாரணை நடத்தியிருக்க வேண்டும்: துஷ்யந்த் தவே

-சபாநாயகர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல- சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்; தவே

-வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் குவிந்திருப்பதால் நீதிமன்றம் நிரம்பி வழிகிறது

-தமிழக அரசியல் சூழலால் டெல்லியில் சிலருக்கு மகிழ்ச்சி- துஷ்யந்த் தவே

-வழக்கறிஞரே மத்திய அரசை குற்றம்சாட்டலாமா?: அரிமா சுந்தரம் கேள்வி

-மத்திய அரசு மீதான புகாருக்கு சபாநாயகர் தரப்பு வக்கீல் அரிமா சுந்தரம் பதில்

-பிப்ரவரியில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம்: துஷ்யந்த் தவே

-தமிழகத்தில் நடக்க வேண்டியதை டெல்லியில் இருப்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்- தவே

-எடப்பாடிக்கு பதிலாக வேறு முதல்வரை தேர்வு செய்தால் ஆட்சிக்கு ஆதரவு- தவே வாதம்

-அதிருப்தி வேறு; கட்சித் தாவல் வேறு என்பதை எதியூரப்பா வழக்கு தீர்ப்பு மூலம் சுட்டி காட்டினார் தவே

-எதியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடிதம் போல தினகரன் எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதினர்: தவே

-18 எம்.எல்.ஏக்களுக்கும் அரசுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை: தவே

-கட்சித் தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்- தவே

-அதிருப்தியை வெளிப்படுத்தும் உரிமை எம்.எல்.ஏக்களுக்கு இருக்கிறது

-உட்கட்சி ஜனநாயகத்தை கட்சிகள் அனுமதிக்க வேண்டும்: தினகரன் தரப்பு

-முதல்வருக்கான ஆதரவை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற உரிமை உண்டு- தவே

-எதியூரப்பா வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி தவே வாதம்

-எடப்பாடி அரசு ஊழல் செய்வதால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம்: தினகரன் தரப்பு

-எடப்பாடி அரசு மீது ஊழல் புகார் கூறிய ஓபிஎஸ் மீது நடவடிக்கை இல்லை- தவே சுட்டிக்காட்டினார்

-ஊழலை மறைக்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்: தவே

-18 பேரை அவசரமாக நீக்கி அரசிதழில் வெளியிட்டுள்ளனர்- துஷ்யந்த் தவே

-பெரும்பான்மை இல்லாததால் 18 பேர் தகுதி நீக்கம்: துஷ்யந்த் தவே

--ஜனநாயக அமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் சபாநாயகர் நடவடிக்கை உள்ளது- தவே

-18 எம்.எல்.ஏக்களும் முதல்வரை மட்டும் மாற்ற கோரினர்

-18 எம்.எல்.ஏக்களும் கட்சி மாறவே இல்லை- துஷ்யந்த் தவே

-18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் தந்த கடிதத்தை தவே வாசித்து காட்டினார்

-தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சபாநாயகர் போதிய கால அவகாசம் தரவில்லை- தவே வாதம்

-சபாநாயகர் உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளன

-சபாநாயகர் உத்தரவுகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டதே: துஷ்யந்த் தவே

Hearing on disqualification of TN MLAs starts at Chennai High Court - Live

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Arguments begin before Justice M. Duraiswamy of Madras HC in cases filed against disqualification of TN MLAs

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற