For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் இருதயக் கோளாறுகள்... பள்ளி மாணவர்களுக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் ஷாக்!

Google Oneindia Tamil News

நெல்லை: பள்ளி மாணவர்களிடையே இருதயக் குறைபாடுகள் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடந்த இருதய பரிசோதனையில் 172 பேருக்கு இருதய குறைபாடு இருப்பது ஆய்வில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மற்றும் சங்கரன்கோவில் சுகாதார நலத்துறை சார்பில் தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு இருதய நலன் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது.

மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை

38 நடமாடும் குழுவினர் இந்த பரிசோதனையை நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலு்ம் மேற்கொண்டனர். இதில் 172 மாணவர்களுக்கு இருதயத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.

கூடுதல் சோதனைகள்

கூடுதல் சோதனைகள்

இதனை தொடர்ந்து அவர்களுக்கு அதிநவீன கருவிகள் மூலம் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஓரளவு குறைபாடு கொண்ட 25 பேர் தொடர் சிகிச்சைக்கு பரி்ந்துரை செய்யப்பட்டனர். மேலும் அதிக பாதிப்புள்ள 45 பேருக்கு சென்னையில் மருத்துவமனையில் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

45 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை

45 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை

ஓரு மாணவருக்கு இருதய அறுவை சிகி்ச்சை செய்ய குறைந்தபட்சம் ரூ.1.25 லட்சம் செலவாகும். இந்த தொகை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் ஐஸ்வர்யம் டிரஸ்ட் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அதிர்ச்சியில்

பெற்றோர்கள் அதிர்ச்சியில்

இந்த ஆய்வு பெற்றோர் மத்தியில் பலத்த அதிர்வு அலையை உருவாக்கியுள்ளது. ஓரே நேரத்தில் 172 பேருக்கு இருதயத்தில் குறைபாடு என்பது பெற்றோர்களுக்கு குழந்தைகள் உடல் நலத்தில் சரியான விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.

English summary
Doctors have revealed that heart related ailments were found among school students in Nellai in a recent medical test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X