For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு தெலுங்கானாவில் இதுவரை 178 பேர் பலி!

வெளுத்தும் வாங்கும் வெயிலால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் உயிரிழந்துவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வெயில் தாளமுடியாமல் இந்த ஆண்டு தெலுங்கானாவில் இதுவரை 178 பேர் உயிரிழந்துவிட்டனர்.

பருவமழை பொய்த்துவிட்டதால் இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் நீண்ட நாளுக்கு பிறகு உக்கிரம் அடைந்துள்ளதால் பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், உயர் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

Heat wave continues in Telangana, toll rises to 178

இந்த வெயிலால் பணி நிமித்தமாக வெளியே செல்வோர் நீர் சத்து குறைபாட்டால் மயங்கி விழுகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் சொல்ல முடியவில்லை. அடுப்பின் மீது உட்கார்ந்து கொண்டிருப்பதை போல் அனைவரும் உணர்கின்றனர்.

தெலுங்கானாவில் வெயிலினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு இதுவரை 178 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 44 முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

English summary
Many parts of the telangana remained in the grip of heat wave despite rains or thundershowers at few places. The death toll due to heat wave in Telangana rose to 178.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X