• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூடுபிடிக்கும் ஆசிக் மீரா மீதான பாலியல், கொலை மிரட்டல் புகார்கள்

By Mayura Akilan
|

திருச்சி: ருச்சி துணை மேயர் ஆசிக் மீரா பதவிப் பறிப்பு, அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட விவகாரம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சி மாநகர துணை மேயராக இருந்த ஆசிக் மீரா திங்கள்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து மேயர் ஜெயாவிடம் கடிதம் கொடுத்தார். இந்த திடீர் ராஜினாமாவின் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் இருந்திருக்கிறது.

திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா தன்னை கர்ப்பமாக்கி விட்டு குடும்பம் நடத்த வராமல் புறக்கணிக்கிறார். அவரது அத்தை, நண்பர்கள் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். என்னை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையுடன் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தன்று புகார் மனு அளிக்க வந்தார் துர்கேஸ்வரி (28) என்கிற இளம்பெண். அவரிடம் மனுவை வாங்கிக்கொண்ட காவல் ஆணையர் அலுவலர்கள் துர்கேஸ்வரியை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தனர்.

குழந்தையை கடத்த முயற்சி

குழந்தையை கடத்த முயற்சி

இந்த நிலையில் மே 4-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் துர்கேஸ்வரிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைக் கடத்தவும் முயற்சிகள் நடந்தன. பிறகு அந்த முயற்சிகள் பலனளிக்காததால் ஆசிக் மீரா தரப்பினர் என சொல்லிக் கொண்டு சிலர் வீடு தேடிச் சென்று துர்கேஸ்வரியிடம் தகராறு செய்யும் படலம் தொடங்கியது.

துர்கேஸ்வரி மறுபடி நீதி கேட்டு தனது போராட்டத்தைத் தொடக் கினார். சனிக்கிழமை பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த ஆசிக் மீரா, துர்கேஸ்வரியை அநாகரிகமான வார்த்தைகளால் பேச பதிலுக்கு அந்தப் பெண்ணும் பேச இருவரையும் ஆய்வாளர் ஜெயசுதா படாத பாடுபட்டு சமாதானப் படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

அவகாசம் கேட்ட போலீஸ்

அவகாசம் கேட்ட போலீஸ்

இதுகுறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞரான பானுமதி கூறிய தாவது:

‘காவல்துறையினரிடம் சனிக்கிழமை புகார் கொடுத்த போது, பொன்மலை காவல் சரக உதவி ஆணையர் எங்களிடம் 2 நாள் அவகாசம் கேட்டார். ஆனால், புகார் கொடுத்து 5 நாள்கள் ஆகிவிட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்

நாங்கள் இனி வேறு வடிவ போராட்டம் மூலம் காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்ய நெருக்கடி கொடுப்போம். மக்களை திரட்டி போராடுவோம் அல்லது நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு பதிவு செய்ய உத்தரவு வாங்குவோம் என்கிறார்.

போட்டோ ஆதராம்

போட்டோ ஆதராம்

துர்கேஸ்வரி, ஆசிக் மீரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தது போன்ற ஆதாரங்களை வைத்துள்ளார்.

சிம் கார்டு ஆதரம்

சிம் கார்டு ஆதரம்

இது தவிர ஆசிக் தனது கைப்பட எனது மனைவி துர்கேஸ்வரி என எழுதிக் கொடுத்து கையெழுத்து, கைரேகையிட்டு கொடுத்த கடிதம், ஆசிக் பெயரில் வாங்கிய சிம் கார்டை துர்கேஸ்வரிக்கு வழங்கி அதை பயன்படுத்தி வந்தது உள்ளிட்ட பல ஆதாரங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார் துர்கா.

ஆசிக் மீராவிற்கு பிறந்த குழந்தை

ஆசிக் மீராவிற்கு பிறந்த குழந்தை

இந்த ஆதாரங்களின் நகலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கத் தயாராகவும் இருக்கிறார். அதையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரமான பிறந்து 2 மாதமே ஆன குழந்தை கரிஷ்மா ஆசிகாவும் துர்கேஸ்வரி வசமே உள்ளது.

ஆதரங்களை கேட்கும் போலீஸ்

ஆதரங்களை கேட்கும் போலீஸ்

ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்என்று காவல்துறை தரப்பில் கேட்டதற்கு, ‘இது ஒரு சென்சிட்டிவான வழக்கு. எடுத்தோம் கவிழ்த்தோம் என இதில் செயல்பட முடியாது. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகிறோம். இன்னமும் சில முக்கிய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்க அந்தப் பெண் முன்வரவில்லை. அவற்றை எல்லாம் கொடுத்தார் என்றால் சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெற்று வழக்கு பதிவு செய்வோம்' என்கிறார்கள்.

மரியம் பிச்சையின் மரணம்

மரியம் பிச்சையின் மரணம்

ஆசிக் மீரா (29) மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன். திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரியம் பிச்சை, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க 2011 மே 23-ம் தேதி சென்னை செல்லும் வழியில் பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சொத்துக்களை பாதுகாக்கும் ஆசிக்

சொத்துக்களை பாதுகாக்கும் ஆசிக்

திருச்சியில் திரையரங்கம், திருமண மண்டபம், குடியிருப்புகள், காலியிடங்கள், திரைப்பட விநியோகத் தொழில், பணம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மரியம்பிச்சை சேர்த்து வைத்து விட்டு போயிருக்கிறார். ஆனால், இவை தன்னைத்தவிர வேறு வாரிசுகளுக்கு போய் சேரக் கூடாது என்பதில் குறியாக இருப்பதால் தவறுக்கு மேல் தவறு செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் ஆசிக் மீரா என்கிறார்கள் மரியம்பிச்சையை நன்கு அறிந்தவர்கள்.

துணைமேயர் பதவி கொடுத்த ஜெ

துணைமேயர் பதவி கொடுத்த ஜெ

மரியம் பிச்சைக்கு இறுதி மரியாதை செய்ய திருச்சி வந்த தமிழக முதல்வர் அந்தக் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதன் விளைவாக அவரது மூத்த மகன் ஆசிக் மீராவுக்கு மாநகராட்சி உறுப்பினர் சீட் கொடுத்து அவரை மாநகராட்சி துணை மேயராகவும் ஆக்கினார்.

தக்க வைக்கத் தவறிய ஆசிக்

தக்க வைக்கத் தவறிய ஆசிக்

துணை மேயர் ஆன போது ஆசிக் மீராவிற்கு வயது 27. இத்தனை சிறிய வயதில் தமிழகத்தில் யாரும் துணை மேயராக இருந்ததில்லை. அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமான பதவியை நல்லவித மாக மக்கள் பணியாற்றி தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார் ஆசிக் என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The Deputy Mayor of Tiruchy, Mariam Asick Meera, reportedly resigned from the post here on Monday after a woman, claiming to be his first wife, alleged that he had reneged on a marriage promise. Durgeswari again became pregnant and this time she decided to deliver the baby. But, Asick Meera, who did not agree for this, allegedly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more