For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூவத்தூரில் கடும் மோதல்... எம்எல்ஏக்களை வெளியேற்ற கிராம மக்கள் கோரிக்கை

அதிமுக எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் கிராம மக்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றக்கோரி கூவத்தூர் பகுதி மக்கள் அதிமுகவினர் மற்றும் மன்னார்குடியில் இருந்து இறக்கப்பட்ட அடியாட்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக ஓபிஎஸ் அணி விகேஎஸ் என பிரிவுகளாக உள்ளது. யார் முதல்வர் பதவியை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

Heavy fight between the public and the ADMK people near in resort at koovathoor

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் மன்னார்குடி கும்பல் அச்சமடைந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவி விடக்கூடாது என்பதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் அனைத்து எம்எல்ஏக்களையும் அந்தக் கும்பல் சிறை வைத்துள்ளது.

அவர்களை கண்காணிக்க மன்னார்குடியில் இருந்து அடியாட்களை இறக்கி பாதுகாத்து வருகிறது. ரிசார்ட் அருகே உள்ள அந்த கும்பல் அப்பகுதி மக்களையே அங்கு செல்லவிடாமல் பிரச்சனை செய்து வருகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த கூவத்தூர் பகுதி மக்கள் அவர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினர். இதற்கு உடன்படாத அவர்கள் கிராம மக்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
There was heavy fight between the people and the ADMK workers near in resort at koovathoor near Mahabalipuram. People urges to discharge the Legislators immediately, who have been Jailed in the resort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X