For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்... வேலூர் மற்றும் திருத்தணியில் 108 டிகிரி!

தமிழகத்தில் வேலூர் மற்றும் திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வேலூர் மற்றும் திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டுவிட்டன.

Heavy hot in most of the places in TN

மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் எழுந்துள்ளது.

இதனால் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் வேலூர் மற்றும் திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. அதுபோல் கரூர், திருச்சியில் 106 டிகிரியும், சேலத்தில் 105 டிகிரியும், தருமபுரியில் 104 டிகிரியும், மதுரை, திருவண்ணாமலையில் தலா 103 டிகிரியும், சென்னையில் 102 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் வறுத்தெடுத்துவிட்டது.

மக்கள் தங்கள் வீடுகளில் காலை முதல் மாலை வரை ஏசி போட்டவாறு இருந்தனர். வெளியே செல்வோர் இளநீர், புரூட் ஜூஸ், மோர், பழங்கள், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை அதிகமாக வாங்கி சாப்பிடுகின்றனர்.

ராகி கூழ், கம்பங்கூழ் ஆகியவற்றின் விற்பனை சூடு பிடித்தது. வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் மர நிழல்களில் நின்று ஓய்வெடுத்துவிட்டு பின்னர் தங்கள் இரு சக்கர வாகன பயணத்தை தொடர்ந்தனர்.

வானிலை குறித்த மேலும் செய்திகளுக்கு:

English summary
Heavy hot in most of the places in Tamilnadu. Vellore and Tiruttani hits 108 Degree Fahrenheit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X