For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 மணியானாலும் விலகாத பனிமூட்டம்.. சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய 10 வாகனங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மூடுபனியால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய 10 வாகனங்கள் - வீடியோ

    ராணிப்பேட்டை: 9 மணியானாலும் விலகாத பனிமூட்டத்தில் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

    மார்கழி மாதத்தில் சென்னை உள்ளிட்ட வீடுகள் நிறைந்த நகர்ப்புறங்களிலேயே பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இங்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் புறநகர் பகுதிகளிலும் மற்ற ஊர்களிலும் கேட்கவே வேண்டாம். கடந்த சில தினங்களாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடுமையான பனிமூட்டம் இருந்து வருகிறது. காலை 9 மணி வரை இந்த பனி மூட்டம் தொடர்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

    காங்கிரஸ் அறிக்கையை ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்.. டிஆர் பாலு பரபர!காங்கிரஸ் அறிக்கையை ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்.. டிஆர் பாலு பரபர!

    பழைய பொருள்கள்

    பழைய பொருள்கள்

    என்னதான் பனிமூட்டம் இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதை விடவில்லை. இன்றைய தினம் போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை கொளுத்தியதாலும் வழக்கமான பனிமூட்டத்தாலும் காலை 7.30 மணிக்கு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

    கட்டுப்பாட்டை இழந்த லாரி

    கட்டுப்பாட்டை இழந்த லாரி

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மனந்தாங்கல் மேம்பாலத்தில் இன்று காலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினிலாரி மேம்பால தடுப்புச் சுவரில் மோதியது.

    கன்டெய்னர் லாரி

    கன்டெய்னர் லாரி

    இதையடுத்து அவ்வழியே வேகமாக வந்த இரு லாரிகளும் அந்த மினி லாரி மீது மோதியது. இதைத் தொடர்ந்து கன்டெய்னர் லாரியும் மோதியது. பின்னர் சென்னை நோக்கி சென்ற 6 கார்களும் கன்டெய்னர் லாரியை கவனிக்காததால் மோதி விபத்திற்குள்ளாகின.

    கார்களின் முன்பக்கம்

    கார்களின் முன்பக்கம்

    இதில் கார்களின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கிவிட்டன. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தை அடுத்து அங்கிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவ்வழியாக வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்த அமைச்சர் நிலோபர் கபில் காரை நிறுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.

    படுகாயம்

    படுகாயம்

    விபத்தில் ஆற்காடு, திமிரியை சேர்ந்த மகாலிங்கம் (வயது 46) வெட்டுவானத்தை சேர்ந்த பாலு (23), சேலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (36), குடியாத்தத்தை சேர்ந்த சதீஷ் (28), முத்து (32), கோவையை சேர்ந்த சதீஷ் பாபு (42), வாணியம்பாடி முல்லை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (28), ஆற்காட்டை சேர்ந்த யுவராஜ் (32), விஜயகுமார் (32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Heavy mist results 10 vehicles crashes each other in Chennai - Bangalore NH near Ranipet. Several got injuries and admitted in hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X