For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை எதிரொலி: சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு- எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கனமழை கொட்டி வருவதால் தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை இரவு விடிய விடிய கொட்டிய மழையால் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு முதல் கொட்டி வரும் கனமழையால், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நிலைமை சமாளிக்கப்பட்டது.

தென் மாவட்ட ரயில்கள் தாமதம்

தென் மாவட்ட ரயில்கள் தாமதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, தென் மாவட்டங்களில் இருந்து நேற்று காலை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம், 30 முதல், 40 நிமிடங்கள் தாமதமாக வந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால், குறைந்த எண்ணிக்கையிலேயே மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன.

மின்சார ரயில் பாதிப்பு

மின்சார ரயில் பாதிப்பு

இந்த நிலையில் ஞாயிறு அன்றும் விடிய விடிய கொட்டிய மழையால் திங்கட்கிழமையான இன்று மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள அலுவலகங்களுக்கு வரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ரயில்கள் ரத்து

ரயில்கள் ரத்து

விடிய விடிய விடாது கொட்டும் கனமழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் மூழ்கடித்தது. தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சென்னை சென்ட்ரலிலிருந்து இன்று புறப்பட வேண்டிய சென்னை- விஜயவாடா, விஜயவாடா-சென்னை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்னை பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, கூடுர்-சென்னை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் நேரம் மாற்றம்

ரயில் நேரம் மாற்றம்

சென்னை-விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் இன்று மதியம் 2.05 மணிக்கு புறப்படும். மன்னார்குடி-கோதி எக்ஸ்பிரஸ், பெரம்பூர், ரேணிகுண்டா வழியாகவும், திப்ரூகர்-பெங்களூரு ரயில் ரேணிகுண்டா வழியாகவும், திருவனந்தபுரம்-கவுகாத்தி ரயில் மேல்பாக்கம், ரேணிகுண்டா வழியாகவும் இயக்கப்படுகிறது.

மாற்றுப்பாதையில் ரயில்கள்

மாற்றுப்பாதையில் ரயில்கள்

வட மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர் வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. வண்டி எண்: 12269 சென்னை சென்ட்ரல் -நிஸாமுதீன் துராந்தோ எக்ஸ்பிரஸ், வண்டி எண்: 12842 சென்னை சென்ட்ரல் - ஹவ்ரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ், வண்டி எண்: 12656 சென்னை சென்ட்ரல் - அகமாதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ், வண்டி எண்: 12687 மதுரை - டேராடூன் எக்ஸ்பிரஸ், வண்டி எண்: 06336 கொச்சுவேலி - கவுகாத்தி எக்ஸ்பிரஸ், வண்டி எண்: 12851 பிலாஸ்பூர் - சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் மாற்று வழிப் பாதையில் இயக்கப்படுகின்றன.

English summary
Waterlogging on tracks and point failure, which made changing the tracks difficult, at Central Railway Station delayed long distance trains for hours after the city witnessed heavy overnight rains.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X