வான் மேகம் பூப்பூவாய் தூவும்.. இன்னும் 5 நாட்களுக்கு.. குடையோட வெளியே போங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், " ஜூன் முதல் நாள் முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி( நேற்று) வரை தமிழகத்தில் 244 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

Heavy rain in all over Tamil Nadu and Puducherry for 5 days

இது வழக்கத்தை விட 23 சதவிகிதம் அதிகம். கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கூடுதலாக பெய்துள்ளது.வழக்கமான மழையை விட நடப்பாண்டு 23% கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையைப்பொறுத்த வரை இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

மாநிலத்தில் நேற்று பெய்த மழையின் அதிகளவாக செஞ்சியில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. செப்டம்பர் 1 முதல் 5 வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai meteorological office announced 5 Days, Heavy rain is likely to occur at isolated places over Tamil Nadu and Puducherry.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற