• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு! காவிரி கரையோர மக்களே உஷார்

|

பெங்களூர்: கர்நாடகாவிலுள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைக் கட்டு பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், ஏற்கனவே நிரம்பி வழியும் கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக நீர் வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Newest First Oldest First
7:06 PM, 16 Jul
டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரையொட்டி ஆலோசனை

குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, டி.ராஜா, சரத்பவார், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆலோசனை

6:47 PM, 16 Jul
காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்

புல்வாமாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் முகைதீன் வீட்டில் தாக்குதல்

தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு போலீஸ் பலி

இரண்டு போலீசார் படுகாயம்

5:57 PM, 16 Jul
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை

முதல்வர் இபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கூட்டம்

எம்பிகள் கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

5:04 PM, 16 Jul
ரஷ்யா அதிபர் புதினுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சந்திப்பு

பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் ட்ரம்ப்- புதின் பேச்சுவார்த்தை

4:50 PM, 16 Jul
சென்னையில் நடக்கும் ஐடி ரெய்டு பின்னணி என்ன?

'ஆபரேஷன் பார்க்கிங் மனி' என்ற பெயரில் ரெய்டு

கார்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை பறிமுதல் செய்ய ரெய்டு

சென்னையில் கோடிக்கணக்கான பணத்துடன் உலா வரும் கார்கள்

கார்களை தேடி அலைகிறார்கள் வருமான வரித்துறையினர்

4:50 PM, 16 Jul
சென்னையில், அதிமுக எம்பிக்கள் ஆலோசனை

கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை

துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடியும் பங்கேற்பு

நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் தொடங்க உள்ள நிலையில் ஆலோசனை

4:31 PM, 16 Jul
சென்னை வருமான வரி சோதனையில் 100 கிலோ தங்கம் பறிமுதல்

பெரம்பூரில் 81 கிலோ தங்கம், தாம்பரத்தில் 19 கிலோ தங்கம் பறிமுதல்

80 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

4:30 PM, 16 Jul
தொடரும் ஐடி ரெய்டுகள்: தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெடுஞ்சாலைத்துறையில் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்பட்டுள்ளது - ஸ்டாலின்

முதல்வருக்கு ஏற்றபடி லோக் ஆயுக்தா வடிவமைக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் ஐடி ரெய்டுகள், ஊழல் நடப்பதற்கு சாட்சி

கொள்ளைபோன கோடிக்கணக்கான பணத்தை அரசு மீட்க வேண்டும் - ஸ்டாலின்

4:29 PM, 16 Jul
நெடுஞ்சாலைத்துறை ஊழல் பற்றி விசாரிக்க திமுக ஹைகோர்ட்டில் வழக்கு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கும் நிலையில் வழக்கு

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்

4:29 PM, 16 Jul
கர்நாடகாவுக்கு கன மழை எச்சரிக்கை

மைசூர், மாண்டியா, குடகு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

4:07 PM, 16 Jul
இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை- முதல்வர் முக்கிய அறிவிப்பு

பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கும் - எடப்பாடி பழனிசாமி

சித்தா, யுனானி, ஆயுர்வேதா படிப்புகளுக்கு பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் அறிவிப்பு

3:29 PM, 16 Jul
என்கவுண்டரில் கொல்லப்பட்டரவுடி படத்துக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி

ரவுடி ஆனந்தன் படத்துக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார் விருகம்பாக்கம் ரவி

சமீபத்தில் ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார்

ஆனந்தன் அஞ்சலி நிகழ்ச்சியில் விருகம்பாக்கம் ரவி பங்கேற்றார்

ரவுடி படத்துக்கு எம்எல்ஏ அஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு

2:55 PM, 16 Jul
பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கூரை கவிழ்ந்து 20 பேர் காயம்

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அசம்பாவிதம்

2:53 PM, 16 Jul
90 அடியை தாண்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 75,000 கன அடியாக அதிகரிப்பு

1:36 PM, 16 Jul
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

வரும் 19ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

1:19 PM, 16 Jul
நீட் தேர்வுக்கு கருணை மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ அப்பீல்

கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்ட ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக அப்பீல்

சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ இன்றே அப்பீல் மனு தாக்கல் செய்தது

1:00 PM, 16 Jul
மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் - தெலுங்கு தேசம் கட்சி

மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது தெலுங்கு தேசம் கட்சி

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் - சந்திரபாபு நாயுடு

12:52 PM, 16 Jul
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலையில் மழைக்கு வாய்ப்பு

கடலில் காற்றின் வேகம் அதிகமாக வீசும், கடல் சீற்றத்துடன் காணப்படும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -சென்னை வானிலை ஆய்வு மையம்

12:34 PM, 16 Jul
நீட் கருணை மதிப்பெண் தீர்ப்பு: சிபிஎஸ்இ நாளை மேல்முறையீடு

சிபிஎஸ்இ நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழக்க வேண்டும் - மதுரை ஹைகோர்ட்

மதுரை ஹைகோர்ட் உத்தரவிற்கு எதிராக நாளை மேல்முறையீடு

12:02 PM, 16 Jul
நீட் தேர்வு குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஹைகோர்ட் உத்தரவு

ஹைகோர்ட் தீர்ப்பால் கவுன்சலிங் நடத்துவதில் ஏற்பட்ட குழப்பம் பற்றி ஆலோசனை

11:07 AM, 16 Jul
8 வழிசாலை சூப்பர் சாலையாக அமையும் - அமைச்சர் ஆர்பி உதயக்குமார்

ரஜினி ஆதரவு அளித்துள்ளதால் 8 வழி சாலை சூப்பர் சாலையாக அமையும் - ஆர் பி உதயக்குமார்

10:59 AM, 16 Jul
காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

தமிழகம் தொடுத்த வழக்கில் பதிலளித்துள்ளது மத்திய அரசு

காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை-மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

10:17 AM, 16 Jul
கிறிஸ்டி நிறுவனத்தை தொடர்ந்து மற்றொரு ஒப்பந்த நிறுவனத்திலும் ரெய்டு

சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை

சாலை ஒப்பந்ததாரர்செய்யாதுரைக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை

சென்னையில் மட்டும் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ்பிகே நிறுவனத்தின் 30 வங்கிக்கணக்குகள் ஆய்வு

இதுவரை கணக்கில் வராத 80 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல்

9:02 AM, 16 Jul
சத்துணவு முட்டையில் ரூ.5000 கோடி ஊழலா?

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

தேவையற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளாவிட்டால் நாங்களும் பதிலடி கொடுப்போம் - ஜெயக்குமார்

9:01 AM, 16 Jul
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 80,000 கன அடியில் இருந்து 96,000 கன அடியாக அதிகரிப்பு

கபினி அணையிலிருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 96,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 8ஆவது நாளாக தடை விதிப்பு

8:45 AM, 16 Jul
88 அடியை நெருங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49,000 கன அடியில் இருந்து 60,120 கன அடியாக அதிகரித்துள்ளது

8:44 AM, 16 Jul
தேனியில் தொடர் மழை - மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழைக்காரணமாக கொடைக்கானலில் ஊராட்சி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

8:44 AM, 16 Jul
உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம் - பெண் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிப்பு

2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை பலாத்காரம் செய்து உயிருடன் எரித்தது 5 பேர் கும்பல்

வீட்டில் குழந்தைகளுடன் இருந்த பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற கும்பலுக்கு வலைவீச்சு

8:44 AM, 16 Jul
தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பயங்கரம்

குழந்தை கடத்த வந்ததாக கூறி சாஃப்ட்வேர் இன்ஜினியர் அடித்துக்கொலை

ஹைதராபாத்தை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் கர்நாடகாவில் அடித்துக்கொலை

போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாராணை- கிராம மக்கள் தலைமறைவு

8:44 AM, 16 Jul
விருதுநகர் அருகே சாலை ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலங்களில் வருமானவரித்துறை சோதனை

செய்யாத்துரை என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை
READ MORE

English summary
The Mysuru, Kodagu, Mandya, and Hassan district administrations are on alert given the incessant rains in the Cauvery catchment area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X