For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் தொடர் மழை... கடையநல்லூர் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது - நோய் பரவும் அபாயம்

Google Oneindia Tamil News

கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன.

Heavy rain flooded Kadayanallur houses

72 அடி கொள்ளளவு கொண்ட கடையநல்லூர் கருப்பாநதி நீர்தேக்கம் பகுதிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்தேக்கம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் நீர்தேக்கம் பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறி வருவதாலும், அணைக்கு வரும் 132காண அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Heavy rain flooded Kadayanallur houses

இதனால், கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து சீவலன் கால்வாய், பாப்பான் கால்வாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதாலும் மழையின் காரணமாக இரண்டு கால்வாய்களிலும் 07.11.2015.காலைமுதல் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

Heavy rain flooded Kadayanallur houses

இதன் காரணமாக கடையநல்லூர் மதினா நகர் பகுதி தாழ்வானப் பகுதியாக இருப்பதால் அங்கு தண்ணீர் புகுந்தது. இதையடுத்து வீடுகளுக்குள் மட்டுமின்றி,அந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் கட்சியளிகிறது. தண்ணீர் வெளியேற வாய்ப்புக்கள் இல்லாததால் தேங்கி கிடக்கும் நீர் மூலம் தோற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.

English summary
Rain makes havoc in and around Kadayanallur due to flood and people are stranded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X