For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை, திருப்பூர், நீலகிரியில் தொடர்மழை - வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்வதால் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்வதால் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

தமிழக, கேரள எல்லை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பல ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் பரவலாக கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

நீலகிரியில் மழை

நீலகிரியில் மழை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக இரவு பகலாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. ஊட்டி, நடுவட்டம், தேவாலா, அவலாஞ்சி, தொட்டபெட்டா, எமரால்டு, முதுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, முதுமலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய சில இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டியில் மழை காரணமாக கடுங்குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை, தேயிலை மற்றும் தோட்ட காய்கறி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக முதுமலையில் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவையில் கொட்டும் மழை

கோவையில் கொட்டும் மழை

கோவை நகரில் இன்று அதிகாலை 4.30 மணி முதல் மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. தொடர் மழை காரணமாக கோவையில் கடும் குளிர் நிலவி வருகிறது.

வால்பாறையில் கனமழை

வால்பாறையில் கனமழை

வால்பாறை பகுதியில் தொடர்ந்து பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருப்பதால் வால்பாறை நகரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். வால்பாறை அருகே உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் 83.85 அடியை எட்டியுள்ளது.

அருவிகளில் குளிக்க தடை

அருவிகளில் குளிக்க தடை

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. நடுமலை ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆழியார் குரங்கு அருவில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் மழை

திருப்பூரில் மழை

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. திருப்பூரில் இன்று காலை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பள்ளி- கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதேபோல் அவினாசி, பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயரும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும்

மழை நீடிக்கும்

வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

English summary
Following overnight rains, the district Collector has declared holiday for schools and colleges in Valpari,Coimbatore district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X