For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புஸ்ஸுன்னு போன வெறும் "வாயு".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி டெல்டாவுக்கு நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்

    சென்னை: வர்ற புயல்கூட தமிழ்நாட்டை ஏமாத்திட்டுதான் போகுது.. அரபிக் கடலில் உருவான "வாயு" புயல்.. புஸ்ஸென போய்விட்டது. இதனால் மற்ற மாநிலங்களில் மழை பெய்தாலும் தமிழகத்துக்கு ஏமாற்றம்தான். ஆனால் 4 மாவட்டங்களில் கன மழை என்பது மட்டும் ஆறுதலான விஷயம்!

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாளைக்கு முன்பு தொடங்கிவிட்டது. இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்தசமயத்தில் தான் தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வாயு புயலாக வலுப்பெற்றது.

    ஆனால் நமக்கு மழை இல்லை என்றும் இந்த புயுல் நாளை ஜுன் 13-ம் தேதி குஜராத் பக்கம் கரையை கடக்கும் என்றும் சொல்லப்பட்டு விட்டது. அதனால் நாளைக்கும், நாளை மறுநாளும், குஜராத்தில் செம மழை பெய்ய போகிறது. புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

    பாஜகவுக்கு எதிராக அதிமுகவில் வெடித்தது மோதல்.. அமைச்சர் சண்முகத்தை தொடந்து இன்னும் 2 பேர் போர்க்கொடிபாஜகவுக்கு எதிராக அதிமுகவில் வெடித்தது மோதல்.. அமைச்சர் சண்முகத்தை தொடந்து இன்னும் 2 பேர் போர்க்கொடி

    ராணுவம்

    ராணுவம்

    புயலினால் பலத்த மழை பெய்ய உள்ளதால், அந்த மாநிலத்தில் ராணுவம், கப்பற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு என எல்லா பக்கமும் தயாராகவே எச்சரிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    நம் தமிழ்நாட்டு நிலைமைதான் இன்னும் மோசமாகி வருகிறது. ஒவ்வொரு புயலும் ஏமாற்றத்தைதான் தந்து செல்கிறது. ஆனால் ஒரு ஆறுதலான விஷயம், நெல்லை, கோவை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.

    5 செ.மீ மழை

    5 செ.மீ மழை

    இதுகூட புயலினால் இல்லை... கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால்தான் 4 மாவட்டங்களிலும் மழை வரஉள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சராசரியாக 5 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    அணைகள்

    அணைகள்

    ஏற்கனவே கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. 4 மாவட்டங்களில் மழை என்றாலும், இன்னொரு பக்கம் 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு அனல்காற்று வீசும் என்ற அறிவிப்பின் பீதியும் நம்மிடம் சூழ்ந்துள்ளது.

    English summary
    Meteorological Centre informs that, Heavy Rain in Nellai, Kovai, Theni, Kanniyakumari Districts and Heat Waves in ten districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X