For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீலகிரி மாவட்டத்தில் மழை... மரங்கள் சாலைகளின் குறுக்கே சாய்ந்தன... போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருவதால் மரங்கள் சாலைகளின் குறுக்கே சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Google Oneindia Tamil News

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னல் கனமழையுடன் காற்று பலமாக வீசியதால் சாலையின் குறுக்கே மரங்கள் சாய்ந்துள்ளன.

குன்னூர் அருகே காந்திபுரம் பகுதியில் கேரளா கண்ணூரில் இருந்து காரில் கொண்டிருந்த சுற்றுலாபயணிகளின் கார் மீது பெரிய மரம் ஒன்று விழுந்தில் காரில் பயணம் செய்த ஷாகிர் என்பவர் படுகாயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Heavy rain in Nilgiri District

அவருடன் வந்த மாயன் மற்றும் ஓட்டுநர் குருவாயூரப்பன் காயமின்றி தப்பினார். இந்த வாகனத்தின் பின்னால் வந்த காரில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்து மற்றும் அவருடன் வந்த பெண் பாரதிக்கு காயம் ஏற்பட்டு குன்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பின்னால் வந்த அரசு பேருந்து அதிஷ்டவசமாக தப்பியதால் பயணிகளுக்கு எந்த காயங்களுக்கு ஏற்பட வில்லை அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் 5 கி.மீ. தூரம் வரைக்கும் இருபுறங்களிலும் வாகனங்கள் நின்றது. இன்று அதிகாலை உதகை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக 10 இடங்களில் மரம் விழுந்தன.

குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கார் மீது மரம் விழுந்ததில் பெண் உட்பட இருவர் படுகாயம் குன்னூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

English summary
Heavy rain in Nilgiri District. More than 10 trees were fall down across the road. Traffic affected for 3 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X