For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொத்துக்கிட்டு ஊத்துது வானம்.. 3 மாவட்டங்களில் அருவிகளில் குளிக்க தடை..!

பாதுகாப்பு கருதி 3 அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்து கொண்டிருக்கும் கனமழையினால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எந்த அருவிகளில் எல்லாம் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்படுகிறதோ அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

Heavy rain tourists ban in Falls

அந்த வகையில் கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல 5-ம் நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதலே கோவை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக ஐந்தாவது நாளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக திருமூர்த்தி மலையில் பெய்து வரும் மழையினால், பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க அனுமதி மறக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நெல்லை- களக்காடு தலையணை அருவியில் நீர்வரத்து குறையாமல் உள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக களக்காடு தலையணை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்றுடன் 5-வது நாளாக நீடிக்கிறது. குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள அருவிகள் எல்லாம் வெடிற்சோடி உள்ளது. எனினும் அருவியின் நீர்வரத்தினை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

English summary
Several waterfalls have caused floods due to rain. This has been Tourists are banned for bathing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X