For Daily Alerts
Just In
அந்தமானில் பயங்கர சூறாவளியுடன் மழை - விமானம் சென்னை திரும்பியது
சென்னை: அந்தமானில் பயங்கர சூறாவளி காற்று வீசுவதால் அந்தமான் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பியதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.
சென்னை- அந்தமான் விமானம் இன்று மாலை சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. அந்தமானில் சூறாவளி வீசியதால்விமானம் தரையிறங்க முடியாமல் சென்னைக்கே திரும்பியது. விமானம் திரும்பியதை அடுத்து 129 பயணிகள் சென்னை விமானம் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் பயங்கர சூறாவாளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.