For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்பம், கூடலூரில் பலத்த சூறைக்காற்று: ஏராளமான வாழை மரங்கள் ஒடிந்து நாசம்-விவசாயிகள் கவலை

பலத்த சூறைக்காற்று காரணமாக வாழை மரங்கள் ஒடிந்து நாசமாயின.

Google Oneindia Tamil News

கூடலூர்: தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழையால்,பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் ஒடிந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக கோடை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் கூடலூர், பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.

Heavy winds in Theni District-Banana trees damage

இதில் அடித்த சூறைக்காற்றினால் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் சாலையில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் ஒடிந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதேபோல, பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் மா பயிரிடப்பட்டு அறுவடைக்கு மாங்காய்கள் தயாராகியிருந்தன. நேற்று மாலை அப்பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், மாங்காய்கள் மரத்திலிருந்து உதிர்ந்தன.

English summary
In the district of Theni, heavy banana heavy rains, a number of banana trees were planted on the Kambar Rangar Office Road. Similarly, mango trees in the Periyakulam and its surrounding areas have been scorched by hundreds of acres of mango grown from the tree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X