For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டூ வீலரில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்தப்படும்..தமிழக அரசு உறுதி

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Helmet issue: Tamil Nadu government has assured in high court

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மேலும் பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றோர் மீது எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் வழக்கு விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu government has assured in high court that helmet is mandatory for the people who sat behind in two-wheeler will be strictly enforced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X