For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவுங்கள்!

ஷியாம் ஒரு 9 வயது சிறுவன், இவனது அப்பா பழங்களை விற்கும் வியாபாரம் பார்த்து வருகிறார். ரெம்ப ஏழ்மையான குடும்பம் என்பதால் பழங்கள் விற்பனையைக் கொண்டு தான் இவர்களின் அன்றாட பிழைப்பே ஓடி வருகிறது. இதனால் ஷியாம் 5 மாதங்கள் மட்டுமே படிக்கும் அவல நிலையில் இருக்கிறான். மற்ற பழ சீசன் சமயங்களில் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பழ வியாபாரம் செய்து வருகிறான். இவர்களது குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர்.

Help Children By Contributing To Annamrita

ஆங்காங்கே சென்று பழ வியாபாரம் செய்ய வேண்டும் என்பதால் எப்பொழுதும் ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டே தான் இருக்க வேண்டும். கடைசியில் ஷியாம் குடும்பம் ஒரு நிரந்தரமான இடத்தில் தங்கினார்கள். அங்கேயே அருகில் ஒரு அரசு பள்ளியும் இருக்கிறது. ஷியாமும் அவனது தங்கையும் ஏதுவாக பள்ளியில் படிக்க முடிந்தது. பழங்களை நன்றாக விற்று வியாபாரம் நடந்தால் தான் அவர்களால் ஒரு வேளை சாப்பாடே சாப்பிட முடியும். தற்போது ஷியாமுக்கு பள்ளியில் அன்னமிர்தா திட்டத்தின் மூலம் மதிய உணவை வழங்குவதால் அவனுக்கு ஒரு நேரம் திருப்தியான உணவு கிடைத்து வருகிறது.

இது போன்று பசியால் தவித்து வரும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவையாவது வழங்க உதவுங்கள்.

Help Children By Contributing To Annamrita

இந்தியா, மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றில் வேறுபட்ட ஒரு நாடாக இருந்தாலும் இந்தியர்கள் என்பதில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். இந்தியா உலகின் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடான சீனாவை ஒப்பிடுகையில் இந்தியா, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இது கடந்த வருடத்தை விட 1.9% அதிகம் ஆகும்.

இத்தகைய வளர்ச்சியை நாம் கண்ட பிறகும் இன்னும் இந்தியாவில் பசிக்கொடுமை இருந்து தான் வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் எல்லா துறைகளிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டும் ஒரு தனி மனிதனின் பசியில் மட்டும் நாம் இன்னமும் பின்தங்கியே உள்ளோம். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல. மனித நேயத்துடன் போக்க வேண்டிய விஷயமும் கூட.

Help Children By Contributing To Annamrita

ஒரு தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அளித்திடுவோம் என்ற பாரதியார் பிறந்த பொன்நாடும் இது தான். அந்த கூற்று எங்கே போயிற்று. ஒவ்வொரு தடவையும் இதைச் சொல்லும் போது வருகின்ற புல்லரிப்பும் ஆவேசமும் ஒருவரின் பசியை ஆற்றாது என்பது தான் உண்மை. அதை நாம் செயலில் காட்ட வேண்டும். எதிலும் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி காண நினைக்கும் நாம் இன்று பசியின் கொடுமையில் அவர்களுக்கும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். நம் அருகில் இருக்கும் நபர் பசியைக் போக்கக் கூட நாம் முற்படுவதில்லை. இதில் நம்முள் எவ்வளவு சுயநலம் ஒளிந்து கிடக்கிறது எனது தெரியுமா?

1995 ஆம் ஆண்டில் தான் பசிக் பொடுமையை போக்கவும், குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும் என்பதற்காகவும் பள்ளியில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தினர். இதன் மூலம் அரசாங்க பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் இதில் பலனடைந்தார்கள். யுனிசெப் கருத்துப் படி, இந்தியாவில் 60 மில்லியன் குழந்தைகளில்
50%குழந்தைகள் எடை குறைவாகவும், 45%குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 20%குழந்மைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மெலிந்தும், 75% குழந்தைகள் இரத்த சோகை (அனிமியா) பாதிப்பு உள்ளவர்களாகவும், 57% குழந்தைகள் விட்டமின் ஏ பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Help Children By Contributing To Annamrita

இது தான் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சரியான நேரம் என்று அரசாங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால் இன்னமும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இல்லாமலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியும் பலன் கிடைக்காமலும் அரசாங்கம் தீர்வு காண முடியாமல் தவித்து வருகிறது. மேலும் நம் நாட்டின் ஏற்றத்தாழ்வுகளும், புவியியல் அமைப்புகளும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த விழிப்புணர்வு சென்றடைய முடியாமல் போகிறது.

ISKCON உணவு நிவாரண அறக்கட்டளை இதற்கு சில படிகளை எடுத்து வருகிறது. இது ஒரு இலாப நோக்கமற்ற, மத சார்பற்ற, பிரிவினை இல்லாத பொது அறக்கட்டளை ஆகும். இதை இவர்கள் "அன்னமிர்தா" என்ற பெயரால் அரசாங்க மற்றும் அரசாங்கத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் ஒரு வேளை மதிய உணவை வழங்கி வருகின்றனர். இதற்காக இவர்கள் 20 வகையான சமையல் ஏற்பாடுகளை
ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் நிறுவி திறமையாக செய்து வருகின்றனர். அன்னமிர்தா ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் உணவை வழங்குகிறது.

Help Children By Contributing To Annamrita

இந்த அமைப்பு குழந்தைகளுக்கு உணவையுமு ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதோடு பள்ளியில் சென்று குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறது. பெரும்பாலான ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த ஒரு வேளை மதிய உணவு வழங்குதல் ஒரு வரப் பிரசாதம் என்றே கூறலாம்.

அன்னமிர்தா தாக்கம்

2004 ஆம் ஆண்டில் இருந்தே அன்னமிர்தா நாடு முழுவதும் தன்னுடைய உற்சாகமான உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து விட்டது.
" உணவோடு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் அதனுடன் உற்சாகமான கல்வியையும் வழங்குவதே எங்களின் குறிக்கோள்" என்று கோபால் கிருஷ்ணா கோஸ்வாமி, ISKCON நிறுவனர் கூறுகிறார்.இந்த நிகழ்ச்சி டெல்லி விவசாய முதலமைச்சர் ஆன ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் பாராட்டப்பட்டது என்பு குறிப்பிடத்தக்கது.

அன்னமிர்தா என்பதற்கு உணவு என்று பெயர். ISKCON உணவு நிவாரணம் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு தாயின் அரவணைப்பைப் போல ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதன் மூலம் அவர்களின் நல்வாழ்விற்கு உதவுகிறது. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதே எங்கள் நோக்கம்.

Help Children By Contributing To Annamrita

இந்த அமைப்பு மூலம் நிறைய குழந்தைகள் பலனடைந்து வருகிறார்கள்.இன்னும் இதன் நன்மைகள் எல்லா குழந்தைகளையும் சென்றடைய வேண்டும். அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனித நேயத்துடன் உதவ வேண்டும். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நன்கொடையும் ஒரு குழந்தையின் ஒரு வேளை பசியை போக்கப் போகிறது. அவர்களின் கல்வியும் எதிர்காலமும் நம் கையி் உள்ளது. இன்றே உதவிக் கரம் நீட்டுங்கள், பசியே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். குழந்தைகளின் கண்ணில் பசியை மறையச் செய்வோம். வாருங்கள் உங்கள் மனித நேய கரத்துடன்.

நன்கொடை வழங்க

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X