For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூச்சு விட சிரமப்படும் குறைமாதக் குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்!

புதிதாக பிறந்த தன் குழந்தையை காப்பாற்ற போராடும் இந்த தாய்க்கு உதவுங்கள்.

சென்னை: புதிதாக பிறந்த தன் குழந்தையை காப்பாற்ற போராடும் இந்த தாய்க்கு உதவுங்கள்.

என் குழந்தை பிறந்த முதல் தருணம் அவனை என்னுடைய கைகளால் அணைத்து தூக்கிய போது என் கண்களில் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் வரவில்லை.அது ஆனந்தத்தில் வந்த கண்ணீர். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் எனக்கு குழந்தை இல்லை. பாக்கியம் கிடைக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு தான் ஒரு குழந்தைக்குத் தாயானேன். தாய்மை அடைந்த அந்த தருணம் இதுவரை நான் கண்ட வலிகளை எல்லாம் மறத்து போகச் செய்தது.

Help Lakshmi In Saving Her Newborn!

ஆனால் அந்த சந்தோஷம் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கூட நிலைக்கவில்லை. என் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அவனால் மூச்சு கூட விட முடியவில்லை. 24 மணி நேரமும் செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது என்று கண்ணீர் மல்க கூறுகிறார் லட்சுமி.

இது லட்சுமியின் முதல் குழந்தை. அவரும் அவர் கணவரும் ஒரு பொற்றோராகும் கனவுடன் எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். அவரின் கணவர் ஒரு சிறிய மொபைல் கடையில் வேலை பார்த்து வருகிறார். தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று இரவு பகல் பாராமல் கூடுதல் வேலை புரிந்து வருகிறார்.

இருப்பினும் அந்த பணம் அவரின் குழந்தையின் மருத்துவ செலவுக்குப் போதவில்லை. அவர் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் தன் குழந்தைக்காகவே செலவழித்து வருகிறார். குடும்பத்தை கூட கவனிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் வாழ்கின்றனர். காலையில் கடை திறந்ததிலிருந்து நடு இரவு வரை தன் குழந்தைக்காக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு கொஞ்சம் நேரம் கூட ஓய்வெடுக்க தோன்றவில்லை. எப்பொழுதும் தன் குழந்தையின் நிலை தான் கண்முன் வந்து போகிறது என்று குமுறுகிறார் லட்சுமியின் கணவர்.

Help Lakshmi In Saving Her Newborn!

என் கணவர் ஒரு தந்தையாக, எங்கள் குழந்தையை காப்பாற்றப் போராடி வருகிறார். அவரின் நம்பிக்கை தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. எப்படியாவது நம் குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என்று ஒவ்வொரு முறையும் என்னையும் மனம் தேர்த்தி வருகிறார் என்கிறார் லட்சுமி.

ஒரு நாள் முழுவதும் சலிக்காமல் வேலை பார்த்து வந்து பிறகும் கூட என்னையும் என் குழந்தையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். அவருக்கு இது கடினமாக இருந்தாலும், மன வைராக்கியத்துடன் முயன்று வருகிறார். அவர் தான் எங்கள் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரே உறுதுணையும் ஆறுதலும்.

குறைபிரசவத்தில் குழந்தை பிறப்பது என்பது சாதாரணமாக நடக்கிற விஷயம் என்றாலும் சில குழந்தைகள் சரிவர வளர்ச்சி அடையாத நிலையில் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விடும். இந்த வேதனை தான் இப்பொழுது லட்சுமியின் குழந்தைக்கு நேர்ந்துள்ளது.

லட்சுமியின் கர்ப்ப காலம் ஒரு சில மாதங்கள் நன்றாக சென்று கொண்டு இருந்தது. எனக்கு குறை பிரசவத்திலயே குழந்தை பிறக்கும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. ஆனால் நடந்தது. என் குழந்தையை என்னால் கட்டியணைத்து முத்தம் கூட கொடுக்க முடியவில்லை. ஒரு அம்மாவாக என் குழந்தையை அரவணைத்து கொஞ்சக் கூட முடியாமல், பசிக்கு தாய்ப்பால் கூட கொடுக்க முடியாமல் என் குழந்தை தவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை தூரமாக நின்று அவனை பார்க்கும் போதெல்லாம் என் மனசு வலிக்கிறது. அவன் பிறந்ததும் மருத்துவர்கள் தூக்கிச் சென்று விட்டனர். அவனுக்கு உடனடியாக சிகச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Help Lakshmi In Saving Her Newborn!

மூச்சு விட சிரமப்படும் அவனுக்கு செயற்கை சுவாசம் மட்டுமே வாழ்க்கையாகி விட்டது. ஒவ்வொரு நாளும் என் குழந்தை விடியலுடன் போராடி வருகிறது. அவனுக்கு எப்பொழுதும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதால் போதிய உணவருந்தாமல் கால்சியம் பற்றாக்குறையும் நேர்ந்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அவன் பிறந்த உடனே வலிப்பு நோயும் ஏற்பட்டது. கட்டுப்பாடின்றி அவன் கை கால்கள் எல்லாம் போகும்போது ஒரு தாயாக நான் பட்ட துன்பம் ரணமானது.

அவனின் சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாமலும் நாங்கள் போராடி வருகின்றோம். இன்னும் அவன் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அவன் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது.

அவன் இருக்கும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவுக்கான ஒரு நாள் ஆகும் செலவு 25,000 ரூபாய் ஆகும். அவனின் சிகிச்சை செலவுக்காக நாங்கள் ஏற்கனவே 12 லட்சம் வரை செலவு செய்து உள்ளோம். இன்னும் அவனுக்காக மருத்துவ செலவு சிகச்சைக்கு எங்களிடம் போதிய பணம் இல்லை. அதனால் தான் உங்களின் உதவியை நாடி தேடி வந்துள்ளோம். எங்களுக்கு உதவுங்கள்.
லட்சுமி தன் குழந்தையை மீட்டெடுக்க இன்னும் 8 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

அவர்களின் முதல் செல்லக் குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல போராடி வருகிறார்கள். அவர்களின் அன்பும் அக்கறையும் அவனுக்காக காத்து இருக்கிறது. எங்கள் குழந்தையை காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள். உங்களின் சிறு உதவி எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். என் குழந்தையின் வாழ்நாளை நீட்டிக்க உதவுங்கள். ஒரு பெற்றோரின் வேதனைக்கு கை கொடுங்கள். உங்கள் கரங்கள் நினைத்தால் என் குழந்தைக்கு வாழ்வு கொடுக்கலாம்.

மனித நேயத்துடன் ஒன்றுபடுவோம், உதவிக்கரம் நீட்ட. உங்களின் ஒரு சிறு உதவி தான் ஒரு உயிரை காக்கும் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது என்பதை மறவாதீர்கள். ஒரு தந்தையின் ஆசையை திருப்பி கொடுங்கள்.

வாருங்கள் உயிர் காக்க உதவி செய்வோம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X