For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ராமர் பிள்ளை... ஆக. 14 முதல் ராணுவ பயன்பாட்டுக்கு மூலிகை பெட்ரோல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்.

1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரித்துள்ளதாக அறிவித்தவர் ராமர் பிள்ளை. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிராமப்புறத்தைச் சேர்ந்த கல்வி அறிவு இல்லாத ராமர்பிள்ளையால் எப்படி மாற்று எரிபொருளை தயாரிக்க முடியும்? என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்தியில் 1999-ம் ஆண்டு மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்கி விற்பனை செய்தார் ராமர்பிள்ளை.

ஆனால் அவர் கலப்பட பெட்ரோல் விற்பதாக கூறி பெரும் சர்ச்சையே வெடித்தது. இதன்பின்னர் அவர் சந்தித்த சோதனைகள் ஏராளம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ராமர்பிள்ளை குறித்த செய்திகள் வெளியாவதும் மறைவதும் தொடர் கதையாகி வருகிறது.

தற்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமர்பிள்ளை, ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் ராணுவ பயன்பாட்டுக்காக தம்முடைய மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இதற்காக மும்பையில் உள்ள ராணுவ தளம் மற்றும் சென்னையில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மீண்டும் மூலிகை பெட்ரோல் வருவதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் படிக்காததாலும், அரசியல் குறுக்கீடுகள் காரணமாகவே மூலிகை பெட்ரோல் விவகாரம் பிரச்சனை ஆக்கப்பட்டது.

என்னுடைய மூலிகைப் பெட்ரோல் விரைவில் சந்தைக்கு வரும். என்னுடைய மூலிகை பெட்ரோல் திட்டத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேரடியாக பார்வையிட்டு ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.

English summary
Herbal fuel inventor Ramar Pillai said that his prodcut will be use in Defence sector from Aug. 14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X