For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எதிராளிகளை மண்ணை கவ்வ செய்த வெற்றியாளர்கள் இவர்கள்தான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரைபோல, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து நின்றவர்களை தோற்கடித்த வேட்பாளர்களையும், அவர்கள் சாந்த கட்சிகள் மற்றும் தொகுதிகளையும் ஒரு ரவுண்டு பாருங்கள்:

ஆண்டிப்பட்டியில் அதிமுகவின் தங்க தமிழ் செல்வன், திமுகவின் மூக்கையாவை 30196 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

Here is the list of candidates who won with big margin of vote in the Tamilnadu assembly election

அவினாசியில் அதிமுக வேட்பாளர் தனபால், திமுக வேட்பாளர் ஆனந்தனை 30674 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சென்னை, ஆர்.கே.நகரில் அதிமுகவின், ஜெயலலிதா, திமுகவின் சிம்லா முத்துச்சோழனைவிட 39545 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில், அதிமுகவின் பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் அண்ணாதுரையைவிட அதிகமாக 42022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார், பாஜகவின் விஜயராகவனைவிட 46 ஆயிரத்து 295 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கீழ்பென்னாத்தூரில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி, அதிமுக வேட்பாளர் செல்வமணியைவிட 34666 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கீதா, திமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் ஐயரை விட 35301 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

குமாரபாளையத்தில், அதிமுகவின் பி.தங்கமணி, திமுகவின் யுவராஜைவிட, 47329 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.

கொளத்தூரில் திமுகவின் ஸ்டாலின் 37730 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஜே.சி.டி.பிரபாகரை வீழ்த்தி, வெற்றி பெற்றார்.

பத்மநாபபுரம் தொகுதியில், திமுகவின் மனோ தங்கராஜ், அதிமுகவின் ராஜேந்திர பிரசாத்தைவிட 40905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரத்தில் அதிமுகவின் மணிகண்டன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவை 33 ஆயிரத்து 222 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவின் சந்திரபிரபா, புதிய தமிழகம் வேட்பாளர் முத்துகுமாரை 36673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கனகராஜ், காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனைவிட 36631 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

திருவாரூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தைவிட 68366 வாக்குகள் அதிகம் பெற்று, திமுகவின் கருணாநிதி வெற்றி பெற்றார்.

தொண்டாமுத்தூரில் அதிமுகவின் வேலுமணி, திமுக கூட்டணியிலுள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் கோவை சையது முகமதுவை 64 ஆயிரத்து 48 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தி சென்றபடி இருந்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில், அதிமுகவின் விஜயகுமார், திமுகவின் சாமிநாதனைவிட 37774 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி, பாஜகவின் தர்மராஜைவிட 33143 வாக்குகள் அதிகம் பெற்று வெர்றி பெற்றுள்ளார்.

English summary
Here is the list of candidates who won with huge margin in the Tamilnadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X