For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு ரூ1,000 வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை தடை

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ1,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் சார்பாக பொங்கல் பரிசு ரூ1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதற்கான திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

High Court Madurai Bench Stays TN govts Pongal Gift

இந்நிலையில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ளன.

இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. இப்போதே பல பகுதிகளில் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் பொங்கல் பரிசு ரூ1,000 வழங்கப்பட இருந்தது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் ரூ1,000 பொங்கல் பரிசு வழங்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 27 மாவட்டங்களில் இப்பொங்கல் பரிசு வழங்க தடை விதித்துள்ளது.

10 ஆண்டுகளாக கணவரின் சடலத்தை ப்ரீசரில் பாதுகாத்த மனைவி.. காரணம் தெரியாமல் போலீசார் குழப்பம்!10 ஆண்டுகளாக கணவரின் சடலத்தை ப்ரீசரில் பாதுகாத்த மனைவி.. காரணம் தெரியாமல் போலீசார் குழப்பம்!

English summary
Madras High Court's Madurai Bench Stays the Tamilnadu Govt's Pongal Gift in 27 Districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X