For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்மாதிரியான மெர்சல்.. கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய ஹைகோர்ட் தீர்ப்பு!

கருத்து சுதந்திரம் என்பதற்கு இந்திய அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. பல ஆயிரம் கோடி செலவில் உருவான ஆதார் அடையாள அட்டை வழக்கில், தனிமனித அந்தரங்கம் அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் கூற

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்துக்கு தடை விதிக்கக் கோரியும், அப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரியும் அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு மனுதாரர் அஸ்வத்தாமன் ஆஜராகி, தான் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை இன்றுவிசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

    விசாரணை நடத்திய நீதிபதிகள், மனுதாரருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியதோடு, மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

    சரமாரி கேள்வி

    சரமாரி கேள்வி

    திரைப்படத்தில் வந்த வசனம் குறித்து கேள்வி எழுப்பும் நீங்கள், மாற்றுத்திறனாளிகளை தவறாக காண்பிப்பது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை, கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உள்ளது என்றெல்லாம் நீததிபதிகள் சரமாரியாக மனுதாரரிடம் கருத்துக்களை கூறியுள்ளனர்.

    மக்கள் கருத்து

    மக்கள் கருத்து

    பல நாட்களாக ரசிகர்கள், பொதுமக்கள், ஊடகங்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதே கருத்தை கூறிவந்த நிலையில், நீதிமன்றம் அதையே பிரதிபலித்துள்ளது. அதிலும் தணிக்கைத் துறையே அனுமதித்த பிறகு படத்தை வெளியிடுவதை தடுப்பது, காட்சிகளை நீக்குவது என்பதெல்லாம் தப்பான முன் உதாரணமாகிவிடும். நீதிமன்றம் அதற்கு வாய்ப்பு தரவில்லை.

    பலரும் பாதிக்கப்படுவார்கள்

    பலரும் பாதிக்கப்படுவார்கள்

    தீபாவளிக்கு திரைக்கு வந்த மெர்சல் திரைப்படம், தனது முதலீட்டு செலவை ஈடுகட்டி இப்போதுதான் லாபத்தை பார்க்க ஆரம்பித்துள்ளது. இந்த நேரத்தில் படத்திற்கு தடை வந்திருந்தால், பட தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, தியேட்டரில் பாப்கார்ன் விற்பவர் வரை பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதையும் நீதிமன்றம் தவிர்த்துவிட்டது.

    கருத்து சுதந்திரம்

    கருத்து சுதந்திரம்

    கருத்து சுதந்திரம் என்பதற்கு இந்திய அரசியலமைப்பு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. பல ஆயிரம் கோடி செலவில் உருவான ஆதார் அடையாள அட்டை வழக்கில், தனிமனித அந்தரங்கம் அடிப்படை உரிமை என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதிலும், அரசியல் சாசன அமர்வே இதை கூறியது. இப்படி இருக்கும் சூழலில் இனிமேலும் திரைப்படங்களுக்கு எதிராக மிரட்டல்விடுப்போருக்கு சம்மட்டி அடியாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது ஹைகோர்ட் தீர்ப்பு.

    English summary
    High court verdict on Mersal is a reflection of people's opnion which is welcomed by TN people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X