மீன்கள் வரத்து அதிகரிப்பு - நெல்லை மீனவர்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: தருவைகூடம் ஏல கூடத்திற்கு மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் மீனவர்களும், பொது மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

குளத்தூர், தருவைகுளம் கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த காற்று வீசி வந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தருவைகுளம் மீன் ஏலகூடம் ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

High number of fish caught by fishermen

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருவைகுளம் மீன் ஏல கூடத்திற்கு மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன் ஏல கூடமும் ஆள்களால் நிறைந்து காணப்படுகிறது. இதில் ஊளி, சீலா, முறல், வாலமுறல், கட்டமுறல், கருப்பு களிங்கன், பச்சை களிங்கன், கேறைஸ, சூறை, வரி சூறை, கலப்பு போன்ற மீன்கள் வந்துள்ளது. மேலும் மீன்கள் வரத்து அதிகமாக உள்ளதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இதில் ஊளி கிலோ ரூ.250, சீல கிலோ ரூ.400, முதல் வகை மீன்கள் ரூ.230 வரையும் ஏலம் போனது. கலப்பு வகை மீன்கள் கிலோ ரூ.40, வரிசூரை மீன்கள் ரூ.60, கோரை கிலோ ரூ.110 முதல் ரூ.140 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக கடலில் சூறை காற்று அதிகமாக இருந்ததால் மீன்கள் வரத்து இல்லை. தற்போது கடல் பரப்பு அடங்கியுள்ளதால் மீன்கள் வரத்து அதிகமாக இருக்கிறது.

இதன் எதிரொலியாக மீன்கள் விலை குறைந்துள்ளன. மேலும் கடலில் மீன்பாடி அதிகமாக இருப்பதால் மீனவர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nellai fishermen caught high number of fish and they get reasonable money from auction.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற