For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட் புக்கிங்கில் இந்தி எஸ்எம்எஸ்.. இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதிலும் இந்தி பதிவு

Google Oneindia Tamil News

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் ஆங்கிலம் இந்தி மொழியில் பதிவுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் இந்தி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் - வீடியோ

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் திருநாவலூர், கெடிலம், சேந்தமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

    Hindi language in Indian Bank ATM receipt

    இந்த வங்கியின் ஏடிஎம் சென்டரில் இருந்து நேற்று வந்த ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதிவுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம் வெங்கடேசன் கூறும்போது இந்த வங்கியின் வாடிக்கையாளராக கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் பொதுமக்கள் தான் உள்ளனர். இந்த வங்கி ஏடிஎம்மில் கடந்த இரண்டு நாள்களாக வரும் செய்திகளில் தமிழ் எழுத்து இல்லை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் அனைத்து பதிவுகளும் வந்துள்ளது.

    Hindi language in Indian Bank ATM receipt

    இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் கூட தமிழக அரசு உறுதி அளித்துள்ளனர். ஆனால் தற்போது ஏடிஎம் செண்டரில் வரும் ரசீதில் கூட தமிழ் எழுத்து இல்லை.

    தமிழகத்தில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ்.. பயணிகள் தவிப்பு தமிழகத்தில் ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு இந்தியில் மெசேஜ்.. பயணிகள் தவிப்பு

    இதுகுறித்து வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் வங்கி முன்பு வாடிக்கையாளர்கள் திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

    English summary
    Hindi language in Indian Bank ATM receipt at Ulundhurpet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X