For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிந்தி மொழி படிப்பவர்கள் எண்ணிக்கை.. தென் மாநிலத்திலேயே தமிழகத்துக்குதான் முதலிடம்!

தென்மாநிலங்களில் தமிழகத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் இந்தி மொழி கற்பதாக தட்சிண பாரத இந்தி பிரசார் சபா கூறியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : தென்மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அதிக அளவில் இந்தி பயில்வதாக இந்தி பிரச்சார் சபா பொதுச்செயலாளர் கிருஷ்ணராவ் கூறியுள்ளார்.

தென்மாநில மக்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதற்காக சென்னை தியாகராய நகரில் 1918ம் ஆண்டு மகாத்மா காந்தியார் தட்சிண பாரத இந்தி பிரச்சார் சபா தொடங்கப்பட்டது. இங்கு சில காலம் மகாத்மா காந்தி தங்கியிருந்து சபாவை வளர்த்தார்.

 Hindi Prachar sabha says Tamilnadu is first in learning Hindi

இந்தி பிரச்சார் சபாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி மொழி பயில்கின்றனர். 3 வயது மதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்தி மொழியை கற்று வருகின்றனர். பிராத்மிக், மத்தியமா, ராஷ்டிரபாஷா, பிரவேசியா, விசாரத் என்று 8 வகை தேர்வுகளை படித்து முடித்தால் அது இளநிலை பட்டப்படிப்பான பிஏ பட்டத்திற்கு நிகரானது.

சென்னையில் உள்ள சபா மூலம் தற்பது 4 மாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாண, மாணிவகள் இந்தி பயில்வதாக சபாவின் பொதுச்செயலாளர் ஜி.வி.கிருஷ்ணராவ் தெரிவத்துள்ளார். இவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த மூன்றரை லட்சம் மாணவர்கள் படிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தி மொழி கற்கும் மாணவர்களில் ஆந்திர மாநிலம் இரண்டாவது இடத்தையும், தெலங்கானா மாநிலம் மூன்றாவது இடத்தையும், கேரளா மாநிலம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்தி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்ற தமிழக மண்ணில் ஹிந்தி கற்க ஆர்வம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பிற தென் மாநிலங்களில் ஹிந்தி பரவலாகியுள்ளது. தமிழகத்தில் அது புதிதாக கற்கப்படுகிறது. எனவே எண்ணிக்கை அதிகம் என்பதை போல தோற்றம் தெரிகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

English summary
Among south indian states Tamilnadu is leading in learning Hindi, Hindi Prachar sabha general secretary says this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X