For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதை எதிர்க்கும் ரம்யாவை திரையுலகம் புறக்கணிக்க வேண்டும்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Hindu Makkal Katchi condemns actress 'Kuthu' Ramya

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.

ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Hindu Makkal Katchi condemned actress turned politician Ramya for opposing TN government's decision to free Rajiv Gandhi's assasins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X