பீர் வாங்குவது போல் நடிப்பதா... நயன்தாராவை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது இந்து மக்கள் கட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட ஷூட்டிங்கிற்காக நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சியிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.

Hindu makkal katchi planned to protest against Nayanthara…

பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது.

தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+