For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் கோர்ட் உத்தரவு: நெல்லையில் 20 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் திக்..திக்

நெல்லையில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்ட கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்ட கெடு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதனால் பல ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் பயத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் 2003ம் ஆண்டில் 6300 மதுக்கடைகளை டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் அப்போதைய அதிமுக அரசு திறந்தது. டாஸ்மாக் கடைகளால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் பல ஆயிரம் குடும்பங்கள் அடிப்படை ஆதாரத்தை இழந்து வருகின்றன.

Hiways tasmac shops will be closed from 31st of this month by court order

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாக கூறி
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்ச் 31ம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்க பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் உள்ள கோயில், பள்ளி, கல்லூரி அருகில் உள்ள சுமார் 2800 கடைகளை மூடிவிட்டு வேறு இடத்திற்கு மாற்ற கடை ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஹைகோர்ட் விதித்த கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு எதையும் கண்டு கொள்ளாமல் மவுனமாக இருந்து வருகிறது.

மார்ச் 31ம் தேதிக்குள் கோர்ட் உத்தரவுப்படி 2800 கடைகளை மூடாவிட்டால் சென்னை ஐகோர்ட்டின் பிடி இறுகும் என தெரிகிறது. இந்த கடைகள் மூடப்படும் பட்சத்தில் சுமார் 2800 கடைகளில் பணியாற்றி வரும் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் தங்களின் நிலை என்ன என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

English summary
Hiways tasmac shops will be closed from 31st of this month by court order. So the employees feels sad about their job
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X