For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீழடியில் அகழ்வாய்வு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடல்

கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் தற்போது மூடப்பட்டு வருகின்றன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டதா?-வீடியோ

    கீழடி: கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம், திருபுவனம் வட்டம், கீழடி அருகே அமைந்துள்ள பள்ளிச் சந்தை திடலில் இந்தியத் தொல்லியல் துறையினரால் கடந்த 2 ஆண்டுகளாக (2014-15, 2015-16) அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    Holes evacuated in Kizhadi for research is npw closing

    இதன் மூலம் வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமானங்கள் மற்றும் பலவகையான தொல்பொருள்கள் வெளிக் கொணரப்பட்டன. கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின. இவை கடந்த 30-ஆம் தேதி முடிவடைந்தன.

    எனினும் அங்கிருந்து தொல்லியல் தொடர்பான பொருள்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கீழடியில் 4-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள கோரிக்கை வலுத்து வருகிறது. கீழடியில் 4ம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக சென்னை உய்ரநீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் கீழடியில் மூன்றாவது கட்ட ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்காக ஜேசிபி மூலம் மண் கொட்டப்பட்டு மூடப்படுகிறது. 3-ஆம் கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்த நிலையில் எந்த பொருளும் கிடைக்காததால் தொல்லியல் துறை குழிகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    கீழடியில் ஆய்வை தொடர வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Kizhadi evacuation 3rd stage review process are over by September 30. The holes digged for review is now closing as no old things are found.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X