For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என வேதம் சொல்கிறது! - கமல்

By Shankar
Google Oneindia Tamil News

பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது, என நடிகர் கமல் ஹாஸன் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட தயக்கம் காட்டாதவர் கமல் ஹாஸன்.

சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின் போது, மகாராஷ்ட்ராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

Holy books say Brahmins ate Beef, says Kamal Hassan

அதற்கு பதிலளித்த கமல், "ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.

மாடுகளைக் கொல்வதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்வதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்வதையும் தடுக்கணும்.

வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதைச் சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது," என்றார்.

English summary
After Maharashtra government has put a ban on beef, veteran actor Kamal Haasan said being a vegetarian should be a matter of personal choice. In an exclusive interview to Entertainment Editor Rajeev Masand, Haasan said, 'According to scriptures, Brahmins used to be beef eaters. I don't eat beef anymore, it's a personal choice. Being vegetarian should be a choice.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X