For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிசை வீடு.. 3 வருடம்.. டங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்!

நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    14 வருடம் பொறுமை...ஒரே ஓவரில் நிலைமையை மாற்றிய தினேஷ் கார்த்திக்- வீடியோ

    சென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இருக்கிறார். இதற்கு பின்பு இன்னொரு நபரின் உழைப்பும் கூட இருக்கிறது.

    அபிஷேக் நாயர் என்ற மும்பையை சேர்ந்த பயிற்சியாளர்தான் இவருக்கு புதிய விளையாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐபிஎல், ஒருநாள் என எந்த போட்டியிலும் சரியாக வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினேஷ் தன்னுடைய விளையாட்டு முறையை மாற்றியுள்ளார்.

    அதற்கு அபிஷேக் பெரிய அளவில் உழைத்துள்ளார். 'டங்கல்' படத்தில் வருவது போல தினேஷ் கார்த்திக்கை புதிய பயிற்சி முறைகளால் கொடுமைப்படுத்தியுள்ளார்.

    சிறிய வீடு

    சிறிய வீடு

    அபிஷேக் நாயர் அவருக்கு சொந்தமாக மும்பையில் இருக்கும் சிறிய குடிசை போன்ற வீட்டில்தான் தினேஷ் கார்த்திக்கை தங்க வைத்துள்ளார். பயிற்சி கொடுக்கும் சமயங்களில் எல்லாம் அந்த வீட்டிற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். சென்னையில் எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் இனி உனக்கு இதுதான் வீடு என்று அங்கேயே அடைத்து வைத்துள்ளார்.

    பெரிய கொடுமை

    பெரிய கொடுமை

    பயிற்சி நாட்கள் முழுவதும் அதிகாலையிலேயே எழுப்பி பயிற்சி செய்ய அழைத்து சென்று விடுவார். மும்பையில் சிறப்பாக செயல்படும் மூன்று பயிற்சியாளர்களிடம் மாற்றி மாற்றி நாள் முழுக்க தினேஷ் கார்த்திக்கை பயிற்சி பெற வைத்துள்ளார். மதியம் மட்டுமே 3 பயிற்சி சுற்றுகள் நடக்கும் என்று கூறியுள்ளார். உலகில் யாருமே இப்படி பயிற்சி செய்தது இல்லை என்றுள்ளார்.

    3 வருட உழைப்பு

    3 வருட உழைப்பு

    இந்த பயிற்சியை அபிஷேக், தினேஷ் கார்த்திக்குக்கு ஒருநாள் இரண்டு நாள் கொடுக்கவில்லை. மொத்தம் 3 வருடம் இப்படி பயிற்சி கொடுத்துள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் விட மாட்டேன் என்று குறிக்கோளுடன் தினேஷ் கார்த்திக்கும் இப்படிப்பட்ட பயிற்சியில் இறங்கி இருக்கிறார். 2014ல் பயிற்சி தொடங்கி இருக்கிறது.

    புதிய நுட்பம்

    புதிய நுட்பம்

    இதற்காக 'விஷுவலைசேஷன்' என்னும் புதிய பேட்டிங் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். பந்தை பார்க்காமல், பவுலரின் கை அசைவை வைத்து அது எவ்வளவு வேகத்தில், எந்த திசையில் வரும் என எல்லாவற்றையும் நொடி பொழுதில் கணிக்கும் முறையாகும். இதைத்தான் நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது.

    2வது மனைவி

    2வது மனைவி

    அபிஷேக் நாயரை தினேஷ் கார்த்திக்கின் இரண்டாவது மனைவி என்றும் கிண்டலாக அழைக்கிறார்கள். அபிஷேக் இல்லையென்றால் தினேஷுக்கு என்ன செய்வது என்றே தெரியாது என்றுள்ளார்கள். சின்ன சின்ன விஷயங்களை கூட அபிஷேக் சொல்லித்தான் தினேஷ் மாற்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    இன்னும் கூட இருக்கிறது

    இன்னும் கூட இருக்கிறது

    இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில்தான் இவருக்கு அணியில் தற்போது முக்கியமான இடம் கிடைத்து இருக்கிறது. கொல்கத்தா அணிக்கும் தற்போது கேப்டனாக மாறியுள்ளார். இந்த பயிற்சி இன்னும் தொடர இருக்கிறது. உலக கோப்பை அணிதான் இவர்களின் அடுத்த குறிக்கோள் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind-blowing last two overs the match between Ind and Bangladesh has changed the result. Dinesh Karthik becomes viral on social media after India vs Bangladesh match. Abhishek Nair changes Dinesh Karthik batting style from last 3 years of practices.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X