• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Exclusive: அபிராமிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? (பகுதி 2)

By Lakshmi Priya
|
  அபிராமி கள்ளக்காதல் விவகாரம்-மன நல மருத்துவர்கள் வெளியிடும் பின்னணி

  சென்னை: என்னதான் கள்ளக்காதலுக்கு கள்ளக்காதலர்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொன்னாலும் கூட தவறு தவறுதானே. ஆனால் அவர்கள் அதைத் தவறாகவே உணர்வதில்லை.

  எங்களுடையது தெய்வீகமானது. இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்பதே அவர்கள் சொல்லும் பதிலாக உள்ளது. இப்படிப்பட்ட கள்ளக்காதலர்கள் அதை பல நேரங்களில் பகிரங்கப்படுத்தவும் தவறில்லை. அதேசமயம், கொலை போன்றவற்றிலும் இறங்கி விடுகிறார்கள்.

   How Illicit affairs form?

  இதுகுறித்து உளவியல் நிபுணர் மருத்துவர் அபிலாஷா ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியின் 2ம் பகுதியில் காணலாம்.

  குன்றத்தூர் அபிராமி குறித்து உங்கள் கருத்து?

  இந்த சம்பவத்தை பொருத்தவரை கவுன்சலிங்கின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான சம்பவம்தான் இது. ஏதோ கவுன்சலிங் என்றால் கட்டப்பஞ்சாயத்து என நினைக்கிறார்கள். தற்போது பையனுடைய அப்பா- அம்மா சொன்னால் பெண் வீட்டார் கேட்கமாட்டார்கள். பெண்ணுடைய தாய்- தந்தை சொன்னால் பையனின் வீட்டார் கேட்டபதில்லை. குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்த்து வைக்க அன்று போல் ஒரு பெரியப்பாவோ சித்தப்பாவோ தன்னலமற்றவர்களாக இல்லை. அவரவர் குடும்பத்தை பார்த்துக் கொள்வதில்தான் முனைப்பு காட்டுகின்றனர். எனவே அவர்களுக்கு குடும்பத்தின் முக்கியத்துவத்தை புரிய வைக்க உளவியல் ரீதியாக ஆலோசனைகளை வழங்க நிபுணர்கள் உள்ளனர். சட்டத்தில் விவாகரத்து என்ற விஷயம் இருப்பதே இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் இருப்பதற்காகத்தான். கணவன் மனைவியை துன்புறுத்தினால் இந்த கொடுமைக்காரனுடன் நாம் வாழ்ந்துதான் தீர வேண்டும் என்பதில். அவர்களுக்கு ஒத்து வராவிட்டால் பிரிந்து விடுங்கள். யாராலும் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகதான் இந்த விவகாரத்து என்ற விஷயம் இருக்கிறது.

   How Illicit affairs form?

  குன்றத்தூர் அபிராமி விஷயத்தில் என்ன நடந்திருக்க வேண்டும்?

  அபிராமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோல் அந்த நபருடன் சென்றிருந்ததால் விவகாரத்துக்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். ஆனால் நமது கலாச்சாரம் என்னவெனில் கணவன்- மனைவி பிரியக் கூடாது, குழந்தைகள் இருப்பதால் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தை பிள்ளைகளை விட்டு விட்டு ஓடாமல் பிள்ளைகளை கொன்றுவிட்டு ஓடியுள்ளார். ஏனெனில் பிள்ளைகளை காண்பித்து மீண்டும் அந்த பெண்ணை கணவனுடன் சேர்த்து வைத்து விடுவார்களோ என்ற அச்சம்தான் காரணம். குழந்தைகளுக்காக நீ கணவனுடன்தான் வாழ வேண்டும் என்று உறவினர்கள் கூறும் போது அதை மறுக்க முடியாது. எனவே இவர்கள் இருந்தால்தானே பிரச்சினை என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இன்னொன்று அந்த கள்ளக்காதலனும் இந்த ரெண்டு புள்ளைங்க போனால் என்ன, நம்ம தனியா போய் 10 பிள்ளைகளை பெற்று வளர்க்கலாம் என்று கூறியிருப்பார். ஆண்களின் வாய் ஜாலத்தில் மயங்கும் பெண்ணாக கூட இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் நினைத்து தவறான முடிவை எடுத்துட்டாங்க.

   How Illicit affairs form?

  அபிராமி விஷயத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

  எல்லா கணவன்- மனைவிக்கிடையேயும் பிரச்சினைகள் இருக்கும். ரொம்ப ஒத்து போகாத அளவுக்கு பிரச்சினைகள் இருந்தால் பிரிந்து விடுவது நல்லது. நான் இதுவரை பார்த்த சம்பவங்களில் பெண் கணவனை விட்டுவிட்டு யாருடனாவது சென்றுவிட்டு இரு ஆண்டுகள் கழித்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வருவார். அவரை அந்த கணவன், தன் பிள்ளைகளுக்காக ஏற்றுக் கொள்வார்கள். இதில் ரொம்ப போட்டு அமுக்குவதால் உடன் இருப்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். அந்த பெண்ணை அப்பவே விட்டிருக்கலாம். அதை விட்டுவிட்டு கலாச்சாரத்தை மட்டுமே அந்த பெண் மீது திணிந்துள்ளார்கள்.

  கொலை செய்தால் பிடிபடுவோம் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இருக்காதா?

  அந்த நேரத்தில் யார் இவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் அதை அப்படியே பின்பற்றி நடப்பார்கள். 7.30 மணிக்கு விஷம் கொடு, 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி விடு என்று யார் சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வர். இவர்களெல்லாம் பிரொபஷனல் கில்லர்ஸ் கிடையாதில்லையா, பிடிபடுவோம் என யோசிப்பதற்கு. ஒரு நிமிடத்தில் யாரோ தூபம் போடுவதை கேட்டு இவர்களும் கொன்றுவிடுகிறார்கள்.

  நாம் கொன்றுவிட்டு ஓடினாலும் எங்கும் தப்பி விட முடியாது, போலீஸாரிடம் சிக்கி விடுவோம் என்பதை பழைய செய்திகளை வைத்து பாடமாக கருதமாட்டார்களா?

  அப்படி இல்லை. இவ்வாறு நினைத்தாலும் அந்த நபர் எங்கள் ஊரில் இதுபோல் ஏராளமான விஷயங்கள் நடந்துள்ளன. இன்று வரை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதையெல்லாம் விடு பிறகு பார்த்துக் கொள்ளலாம். குடும்ப கௌரவத்துகாக உனக்கும் எனக்குமான உறவை போலீஸிடம் சொல்ல மாட்டார்கள். உன்னை போட்டு கொடுத்தால் குடும்பத்துக்கு தானே அசிங்கம் என மனதை மாற்றும் பேச்சுகளை பேசுவார்கள். இந்த ஆதாரங்களை நாம் மறைக்க வேண்டும் என நிதானமாக யோசித்திருந்தால் அந்த நிதானத்திலேயே அந்த பிள்ளைகளை அவர் கொன்றிருக்க மாட்டார். அவருக்கு அந்த நிதானம் இல்லை. முழு அழுத்தத்தில் இருந்திருக்கிறார். எப்படா பிச்சிக் கிட்டு ஓடுவோம் என்ற மனநிலையில் இருந்திருக்கிறார். ஒரு குழந்தைக்கு மருந்து கொடுத்துவிட்டு, இன்னொரு குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். அந்த குழந்தையின் முகத்தை பார்த்தாவது மனம் மாறியிருக்க வேண்டாமா.

  (தொடரும்)

  [பகுதி: 1, 2, 3, 4 ]

   
   
   
  English summary
  Illegal lovers never accept that they are doing wrong things.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X