For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆக்ஷன் ஹீரோவாக மாறி வரும் எடப்பாடியார்.. திமுகவிடம் இன்னும் ஆக்ரோஷம் தேவை.. வாசகர்கள் பளிச் தீர்ப்பு

கூட்ட தொடரில் திமுகவின் செயல்பாடு எப்படி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் என்றாலே திமுக வெளிநடப்பு என்ற வாசகம் புழக்கத்தில் உள்ளது.. இந்த முறை நடந்து வரும் சட்டசபையில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? திமுக ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பதுதான் ஊற்று நோக்கப்பட்டு வருகிறது.

இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்ததில் இருந்தே எடப்பாடியார் வேற ரேஞ்சில் இருக்கிறார்.. படுவேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது அதிமுக அரசு.. வெறும் வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட பல அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்று வருகின்றன.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கூட்டத்தொடர் முழுவதும் முதல்வரின் கார - சார பேச்சு பெரும் வைரலாகி வருகிறது... ஆனால் திமுக எவ்வாறு செயல்பட்டு வருகிறது.. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் திமுக விடாப்பிடி உறுதியை வெளிப்படுத்தியே வருகிறது.

எச்.ராஜாவுக்கு செக் வெக்கும் காங்கிரஸ்.. கார்த்தி சிதம்பரம் தமிழக தலைவராவாரா.. எகிறும் எதிர்பார்ப்புஎச்.ராஜாவுக்கு செக் வெக்கும் காங்கிரஸ்.. கார்த்தி சிதம்பரம் தமிழக தலைவராவாரா.. எகிறும் எதிர்பார்ப்பு

வேளாண் மண்டலம்

வேளாண் மண்டலம்

அதேசமயம், "குடியுரிமை சட்டத்தினால் யார் பாதித்திருக்கிறார்கள் சொல்லுங்க, நான் பதில் சொல்றேன்" என்று கேட்டபோது திமுக தரப்பின் நிசப்தத்திற்கு காரணம் தெரியவில்லை.. அந்த சமயத்தில் திமுக தலைவரும் அவையில் இல்லை.. வேளாண் மண்டலம் எப்போது செயலாகும் என்று கேட்டு கொண்டே இருந்தனர்.. அதுவும் கொண்டுவந்தாகிவிட்டது.

வருத்தம்

வருத்தம்

நேற்றைய தினம் "அதிமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. திமுக வெளிநடப்பு செய்தது வருத்தம் தருகிறது.. வேளாண் மண்டல மசோதா நிறைவேறும் நேரத்தில் திமுக வெளிநடப்பு செய்து அரசியல் செய்கிறது.. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேளாண் மண்டல மசோதா ஒரு மனதாக நிறைவேறும் என நினைத்தேன். ஒருமனதாக நிறைவேறாததற்கு வருத்தம் அடைகிறேன்" என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

திமுக

திமுக

தங்கள் கருத்து எடுபடாத பட்சத்தில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையை விட்டு வெளியேறுவது என்பது இயல்பான விஷயம்தான்.. ஆனால் திமுக அதிக அளவு இதனை கையாண்டு வருகிறதோ, வெளிநடப்பு என்றாலே திமுக என்பது பதிக்கப்பட்டு வருவதாக ஒரு பிம்பம் எழுந்துள்ளது.. இதற்கு நிச்சயம் திமுக இடம் தர கூடாது என்பதுதான் பொதுவான கருத்து.

சட்டசபை

சட்டசபை


"குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள், பாதிப்புகள் இருப்பதை பட்டியலிட்டு கூற தயாராக இருக்கிறேன்" என்று திமுக தரப்பில் உறுதியாக சொல்லப்பட்டுள்ளது என்றாலும், "சட்டசபையில் திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது" என்ற கேள்வியை நம் வாசர்களிடம் முன் வைத்தோம். "சூப்பரா இருக்கு" என்று 17.81 சதவிதம் பேரும், "சரியில்லை" என்று 28.77 சதவீதம் பேரும், "வழக்கம்போல்தான்" என்று 31.51 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். "இன்னும் ஆக்ரோஷம் தேவை" என 16.44 சதவிதம் பேரும், "சொல்ல தெரியவில்லை" என 5.48 சதவீதம் பேரும் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

காரம்

காரம்

இது ஒரு கணிப்புதான்.. ஆனாலும் பெரும்பாலானோர் கருத்து திமுகவின் செயல்பாட்டில் இன்னும் வேகம், ஆக்ராஷம் எதிர்பார்க்கிறார்கள்.. "சரியில்லை", "வழக்கம்போல்தான்", "ஆக்ரோஷம் தேவை" போன்ற ஆப்ஷன்கள் எல்லாமே திமுகவின் வெளிநடப்பைதான் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.. ஒருவித சலிப்புதன்மை தென்பட்டாலும், திமுக மீது மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு உள்ளதும் இந்த கணிப்பு வெளிப்படுத்துகிறது... காரம் சற்று கூடுதலாக எதிர்பார்க்கிறார்களே தவிர.. பெரிதளவிலான குறைகள் இல்லை என்பதே உண்மை.. அதேசமயம் எல்லாவற்றிற்குமே வெளிநடப்பும் தீர்வாகிவிடாதுதானே!!

English summary
How is DMK's function in the assembly session
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X